மூன்று பெண்மணிகள்
* உலகின் மிகப் பிரபலமான இதழ் TIME வாரப் பத்திரிகை. சுமார் ஐந்து கோடி வாசகர்களைக் கொண்டது அமெரிக்காவின் புகழ் பெற்ற இதழ் அதற்கு 90 வயது ஆகிறது. முதன் முறையாக சமீபத்தில் ஒரு பெண்மணி (NANCY GIBBS ) அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1988-முதல் ஆசிரியர் இலாகாவில் இருந்த அவர் இது வரை 174 அட்டைப்படக் கட்டுரை எழுதியுள்ளார்.
பொறுப்பை ஏற்றதும் அவர் ஒரு ஒரு புதிய துவக்கம் என்ற தலைப்பில் ‘ஆசிரியர் குறிப்பு எழுதியிருந்தார். அதன் அழகான கருத்தும், சிநேக பாவத்துடன் எளிமையான ஆங்கில நடையில் எழுதப்பட்டிருந்ததும் என்னைக் கவர்ந்தது. மொழிபெயர்த்துப் போடலாம் என்று நினைத்து முயற்சியில் இறங்கினேன்.சில வரிகளைத் தமிழாக்கம் செய்தேன். திருப்தியாக வரவில்லை.(ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க,மேலே உள்ள ’ஒரு புதிய துவக்கம்’ என்பதைச் சொடுக்கவும்.)
* புகழ் பெற்ற READERS' DIGEST இதழிற்கும் ஒரு பெண் தான் ஆசிரியராகி இருக்கிறார். LIZ
VACCARIELLO பல புதிய மாற்றங்களைச் செய்து கலகலப்பாக்கி வருகிறார். .
* இதையெல்லாம் மிஞ்சும் தகவல்: நம் நாட்டில் உள்ள ரிசர்வ் பாங்க் கவர்னர் பதவி போன்றது .அமெரிக்காவில் ஃபெட்ரல் ரிசர்வ் சேர்மன் பதவி. முதல் முறையாக ஜேனட் எல்லன் என்ற ஒரு பெண்மணி சேர்மனாக பொறுப்பேற்று இருக்கிறார்.
ஜேனட்டின் கணவர்: ஜார்ஜ் அகெர்லாஃப் 2001-ம் ஆண்டு பொருளாதாரத் திற்கான நோபல் நினைவுப் பரிசைப் பெற்றவர்.
பஸ்ஸில் வந்த பிரதமர்.
இது பிரிட்டிஷ் பிரதமர் பற்றிய தகவல். சிலமாதங்ககளுக்கு முன்பு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் அமெரிக்கா வந்திருந்தார். தனது பல வேலைகளுக்கிடையே மன்ஹாட்டனில் (நியூயார்க்) இங்கிலாந்து சுற்றுலாதுறை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளவரசர் ஹாரியுடன் பஸ்ஸில் வந்திறங்கினார்.
இதற்காக லண்டனிலிருந்து சுற்றுலாதுறையின் டீலக்ஸ் பஸ் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார்கள். “ எங்கள் சுற்றுலாதுறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட சிறிய முயற்சியாகும்” என்றார் கேமரூன்.