Showing posts with label Inspiration. Show all posts
Showing posts with label Inspiration. Show all posts

March 01, 2020

ரஸ்ஸல் என்பவரின் வரலாறு


யார் இந்த  ரஸ்ஸல்?  கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய  வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். 
சாதனை படைத்தவர்கள், நெகிழ்ச்சியூட்டும்  வரலாற்று நாயகர்கள், அசகாய சூரர்கள், ஏன் அட்டகாசமான தில்லுமுல்லு செய்தவர்களைப் பற்றிய விவரங்கள் போன்ற பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ரஸ்ஸலின் வரலாற்றை இங்கு தருகிறேன்.
ரஸ்ஸல் ஒரு ஹாலிவுட் நடிகர் என்று ஒரு வரி அறிமுகத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.  ஹாலிவுட் வார்த்தைக்கு ஒரு காந்த சக்தி இருப்பதும் காரணம்.
ரஸ்ஸல் ஒரு ராணுவ வீரன். கனடா நாட்டில் 1914-ல் பிறந்தவர். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த ராணுவ முகாமில் பாரசூட் வீரர்களுக்குப் பயிற்சி   கொடுத்துக் கொண்டிருந்தான்.
 அவன்   டி. என். டி.  எனும் பயங்கர குண்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு டி.என். டி. குண்டு என்ன காரணத்தினாலோ  தானாக வெடித்துவிட்டது.  
 ஏதோ சின்ன தவறு நிகழ்ந்துவிட்டது   டி. என். டி. ஒரு பயங்கர குண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.   அடுத்த செகண்ட் நினைவிழந்தான்.  நினைவு திரும்பியபோது மருத்துவ மனையில் இருந்தான்.  மெதுவாக  சுதாரித்து சுற்றுமுற்றும் பார்த்தான். கைகள் இரண்டிலும் கட்டு போடப்பட்டிருந்தது.    இரண்டு கைகளிலும் மணிக்கட்டும் ஐந்து விரல்களும் போய் விட்டதை உணர்ந்தான். டி.என்.டி அவற்றை பலி வாங்கி இருந்தது.  
  முப்பதாவது வயதில் கைகளை இழந்த அவன், தன்னுடைய வாழ்க்கையே அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது போல் உணர்ந்தான்.   வாழ்க்கையே இருண்டுவிட்டது. வருத்தப்பட கூட அவனுக்குத்  திராணியில்லை. இனி உயிருடன் இருப்பதைவிட   செத்துப் போவதே மேல்  என்று எண்ணினான் ரஸ்ஸல்.

January 20, 2020

கைதியின் கடைசிக் கடிதம்

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.


 

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.

என் அன்புள்ள.....‘என் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளைஅப்படியே இக்கடிதத்தில் எழுதுகிறேன். என் கைகளில் விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் என் கையில் இல்லாமல் என் எண்ணங்களுக்கு போடப்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.
எங்களைப் போன்றவர்களுக்கு உலகில் இரண்டே இரண்டு `சாய்ஸ்'தான் உள்ளன. மேலும் மேலும் மேன்மை பெறுவது; அல்லது பின்தங்கிப் போவது. இதற்கு இடைப்பட்ட நிலை கிடையாது. கடவுளை நெருங்குவதற்காக கடினமான பணிகளைச் செய்தவர்களுக்கும் இதுதான் நிலைமை. இடையில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எப்படி ஒரு ராணுவம் வெற்றிப் பாதையில் செல்லும் போது பல தோல்விகளைக் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறதோ அது போல்தான்! ஆகவே நம்பிக்கை இழந்து விட்டு, எடுத்த பணியை கைவிடக் கூடாது. மாறாக மேலும் நெஞ்சுரத்துடன் செயல்பட்டு நம் குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும்.
நீ கடவுளை நேசி. உன் அண்டையில் உள்ளவர்களை நேசி. இந்த இரண்டு விதிகளில் எல்லாமே அடங்கியுள்ளன.
 நாட்டில் அநீதி தலை விரித்து ஆடினால்    நாமும்  அப்படியே அநீதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாகி விடும். ஆகவேதான் நான் உண்மையை அப்படியே கூற வேண்டும் என்று உறுதியாக உள்ளேன். இதன் விளைவாக என் உயிரையே இழக்க வேண்டியிருந்தாலும் கவலையில்லை. ஆட்சியாளர்கள், நிர்ப்பந்தப்படுத்தும் சத்தியப் பிரமாணத்தை நான் எடுத்துக் கொண்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க என்னால் இயலாது.
அன்புள்ள மனைவியே, உன் துயரத்திற்கும் எரிச்சலுக்கும் காரணமான காரியங்களை நான் ஏதாவது செய்திருந்தால், என்னை மன்னிக்கவும். நம் ஊரில் உள்ள எவரையாவது புண்படுத்தியிருந்தாலோ எரிச்சலடையச் செய்திருந்தாலோ என்னை மன்னிக்கும்படி அவர்களிடம் சொல்லவும். என்னைப் பொறுத்த வரை நான் எல்லாவற்றையும் மன்னித்து விட்டேன்...''
*                          *                                *
இதுசிறையிலிருந்து , உயர்ந்த  கொள்கை பிடிப்புள்ள கைதி தன் மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதம். .

1943’ம் ஆண்டு பெர்லின் சிறையிலிருந்து ஆஸ்திரியாவைச் சேர்ந்த சிறிய விவசாயி. ப்ரான்ஸ் ஜகர்ஸ்டேட்டர் தன் மனைவிக்கு, தான் இறப்பதற்கு சில மணி நேரம் இருந்த போது எழுதியது.  ஆம், அடுத்த சில மணியில் அவரது தலை துண்டிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஜகர்ஸ்டேட்டர் அதிகம் படிக்காத எளிய மனிதன். மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பன். கிராமத்து மாதாகோவிலின் கேர்-டேக்கர். இரண்டாவது உலகப் போர் நடந்த சமயம், ஹிட்லரின் ராணுவத்திற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். இவரையும் ராணுவத்தில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது.  பலர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லைஹிட்லரின் உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார். ”இந்தப் போர் நியாயமற்றது; கொடூரமானது” என்று உறுதியாக நம்பினார். `ராணுவ உத்தரவுகளை கீழ்ப்படிவேன்' என்ற சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ள அவரது மனம் சம்மதிக்கவில்லை. ஆகவே `ராணுவத்தில் சேர முடியாது' என்பதை, விளைவுகளுக்கு அஞ்சாமல் அவர் நெஞ்சுரத்துடன் கூறிவிட்டார்.
இப்படி அவர் மறுத்ததற்கு மரண தண்டனைதான் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும்.  எதிபார்த்தபடி அவர் சிறைப்படுத்தப் பட்டார். பல மாதம் சிறையில் இருந்தார். 1943-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி அவர் பெர்லின் சிறையின் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது தலை துண்டிக்கப்பட்டது. இந்தக் கடிதம் 8-ம் தேதி இரவு அவர் எழுதியது,
     இரண்டாவது உலகப் போரில் அழிந்து போனவைகளுக்கு கணக்கே இல்லை.   இருந்தும் வியப்புக்குரிய விஷயம் ஜகர்ஸ்டேட்டரின் கடைசிக் கடிதம் இவைகளில் எதிலும் சிக்காமல் பத்திரமாக அவருடைய மனைவியை அடைந்ததுதான்.
     உயிரைத் திரணமாக மதித்து, தான் நம்பியதை உறுதியாகக் கடைப்பிடித்து, நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன் ராணுவ அதிகாரிகளிடம், ``முடியாது!'' என்று கூறிய அவர் ஒரு அசாதாரண மனிதர்.

செயின்ட் ரீடிட்கண்ட் என்ற சிறிய கிராமத்தின் சர்ச்சின் இடுகாட்டில் அவரது சமாதி உள்ளது.

போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவுச் சின்னத்தில், போரில் இறந்தவர்களின் பெயருடன் ஜகர்ஸ்டேட்டரின் பெயரையும், மாதாகோவிலின் பாதிரியார் அதில் சேர்த்துப் பொறிக்கச் செய்தார்.


       அன்றாடம் நம் வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத பல `சத்தியப் பிரமாணங்கள்' எடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலாவது நாம் ஜகர்ஸ்டேட்டராக துணிவுடன் இருப்போமே!
(Franz Jägerstätter பற்றிய விவரங்கள் விக்கி பீடியாவில் வந்துள்ளது.)

இது ஒரு மீள் பதிவு. புதிதாக வந்திருக்கும் நேயர்களுக்காக!  

September 29, 2017

வாழ்க நீ எம்மான்!

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, காந்திஜி சம்பந்தமான   ஒரு பதிவைப் போடுகிறேன்.
                                                                           டியர் ஃப்ரண்ட்!
1939-ம் ஆண்டு. சொக்கோஸ்லாவியா நாட்டை ஜெர்மனிவளைத்து விட்டது.  அது உலகப்  போருக்கு  பிள்ளையார் சுழி போட்டது. எல்லா ஹிட்லரின் கைங்கரியம்.
போர் மூளாதிருக்க ஒரே வழி ஹிட்லரின் கையில் தான் இருக்கிறது என்று மகாத்மா காந்தி  கருதினார். ஹிட்லருக்குக் காந்தி ஒரு கடிதம் எழுதினார்.

மனித சமுதாயத்தின்  நலனுக்காகப்   போரைத் தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் எழுதிய கடிதம் ஹிட்லருக்குப் போகவில்லைஅதைப் போகவிடாமல் பிரிட்டிஷ் அரசு தடுத்து விட்டது.
 அடுத்த  ஒரு மாதத்தில் போலந்தின் மீது ஜெர்மனி படை  எடுத்தது. அது இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுத்தது.
காந்திஜி எழுதிய கடிதத்தின்போட்டோகா பியைப் பாருங்கள்!
       (என்னால் முடிந்த அளவுக்கு கடிதத்தைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்!)
---------------


June 11, 2014

தானே ஏற்றுக் கொண்ட எளிமை


சிறிய துவக்க உரை
ஒரு சமயம் கல்கத்தா போயிருந்தேன். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போவது என் வழக்கம். கல்கத்தாவில் ‘நியூ மார்க்கெட்’ ரொம்பப் பழமையானது என்றும் அங்குள்ள காலேஜ் வீதி  பழைய புத்தகங்களின் சொர்க்கம் என்றும் என் அலுவலக வங்காள நண்பர் சொல்லி இருந்ததால், கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாக அங்கு சென்றேன்.
அங்கு எனக்கு கிடைத்த  ஒரு புத்தகம்   PETER'S QUOTATIONS. லாரன்ஸ் பீட்டர் என்பவரால் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட அபாரமானப் பொன்மொழிகள் புத்தகம். அவர் ஒரு தொகுப்பாளர் என்றுதான் நினைத்திருந்தேன்  சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் பழையப் புத்தக் சந்தைகளில் அவர் எழுதிய ஒன்றிரண்டு புத்தகங்கள் கண்ணில் பட்டன,

சமீபத்தில் அவர் எழுதிய  ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’  என்றபுத்தகத்தை பற்றிய ஒரு துணுக்கைப் படிக்க நேர்ந்தது, அவர் ஒரு பிரபல எழுத்தாளர் என்பது எனக்கு அது வரைத் தெரியாது . அதனால் அவர் புத்தகங்களைப் படிக்க, லைப்ரரியில் தேடினேன்.
1979-ல் பிரசுரமான PETER'S PEOPLE  என்ற புத்தகம் கிடைத்தது. அதில் தனது ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’ புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு  அவர் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டார்  என்பதை ஒரு   கட்டுரையில்  விவரித்து இருந்தார். கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. அதைச் சற்று சுருக்கி (சுமார்)  தமிழில் தருகிறேன்.
அத்துடன் அந்த குறிப்பிட்ட துணுக்கையும் கடைசியில் தருகிறேன்.

நானே ஏற்று கொண்ட எளிமை - லாரன்ஸ் பீட்டர்
என் குழந்தைப் பருவம் மிகுந்த ஏழ்மை மிக்கது. பின்னால் நான் படித்து வேலைக்குச் சேர்ந்த பிறகு படிப்படியாக, மெதுவாக என் வாழ்க்கைத்தரம் உயர ஆரம்பித்தது.   பிறகு 1969-ல் நான் எழுதிய PETER PRINCIPLE என்ற புத்தகம் மிகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் காரணமாக என் வாழ்க்கைத் தரத்தை ஓரளவு உயர்த்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை ஒரு அவநம்பிக்கையுடன்தான் அணுகினேன்.
வசதிமிக்க என் உறவினர்களில் பலர் தங்கள் செலவினங்களை மிதமிஞ்சி  அதிகப் படுத்திக் கொள்வதையும்,   தேவையற்ற அந்தஸ்துகளையும் பொறுப்புகளையும் ஏற்று, சிக்கல்கள் நிறைந்த  வாழ்க்கையில் அகப்பட்டுக் கொண்டிருப்பதையும் என் மனவி IRENE-ம் நானும் பார்த்துள்ளோம். அது மட்டுமல்ல,   இப்படி வாங்கப்பட்டப் பொருள்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும்,  தங்கள் காலத்தையும், சக்தியையும் அவர்கள் செலவழிப்பதையும் கவனித்துள்ளோம். அவர்கள் பல பொருள்கள் வாங்கினார்கள் என்பதைவிட பல பொருள்கள் அவர்களை வாங்கிவிட்டன என்பதே சரி!

September 12, 2013

ஜி-மெயிலில் வந்த கடிதம்


எனக்கு தினம் யார் யாரிடமிருந்தோ கடிதங்கள் வருகின்றன. லாட்டிரி பரிசு விழுந்ததாக இரண்டு கடிதமாவது வரும், அரசியல், ஆன்மீகம், புகைப்பட ஆல்பங்கள் என்று  பல. பெரும்பாலானவற்றை முதல் வேலையாக குப்பைத்  தொட்டிக்கு அனுப்பி விடுவேன். இன்று ஒரு  கடிதக் கவிதை வந்தது. அதை பதிவாகப் போடலாம் என்று எண்ணினேன். அதற்கு முன்பு ஒரு முன்னுரை எழுதுவது அவசியம்.
*                   *               *
இது 60-களில் நடந்த கதை. அந்த இளைஞன் புனேயில் ராணுவ மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தான்.   ஏ.எஃப்.எம்.சி எனப்படும்  (ARMED FORCES MEDICAL COLLEGE) மருத்துவக் கல்லூரி ஆரம்பித்த வருஷம் முதல் செட் மாணவர்களில் அவனும் ஒருவன். படிப்பில் கெட்டிக்காரன். எம்.பி.பி.எஸ் பரீட்சையில் புனே சர்வகலாசாலையிலேயே முதல் ரேங்க் மாணவனாகப் பாஸ் செய்தான்.
மேலே எம்.டி படிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். எம். பி. பி. எஸ் முடிந்ததும் ராணுவத்தில் 2 (5 ?) ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவித்திருந்தான். (அதன் காரணமாக கல்லூரியில் இடமும்,  கட்டணத்தில் சலுகையும் அவனுக்குக் கிடைத்தது.) ஆகவே அவன் எம்.டி சேர அனுமதி கிடைக்கவில்லை.  (பிரபல மருந்து தயாரிப்பு கம்பெனி ஒன்று அவன் படிப்பிற்கு ஆகும் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்ள, தானாகவே முன் வந்தது!) அதை நிராகரிக்க வேண்டியதாகி விட்டது.

அவன் ராணுவத்தில் பணியாற்றத் துவங்கினான். பிறகு மேலே படிக்க அவனுக்கு அனுமதி தந்து விட்டார்கள் - ஒன்றிரண்டு நிபந்தனைகளுடன். அவனும் எம்.டி படிப்பில் சேர்ந்தான். இந்த சமயத்தில் பங்களா தேஷ் போர் துவங்கியது. அவனை டியூட்டிக்கு வரச் சொன்னார்கள்.
போர் முடிவதற்கு முந்தைய தினம் புனேயிலிருந்த அவனை அஸ்ஸாம் போகச் சொன்னார்கள். அங்கு சில ராணுவ வீரர்களுக்கு அவசர மருத்துவ சேவை செய்வதற்கு (என்று நினைக்கிறேன்). விமானப் படை விமானம். அஸ்ஸாமில் இந்திய எல்லையினருகில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் தொடர்பு விட்டுப் போய்விட்டது.

பயங்கர காட்டுப் பகுதியில் நடந்தே போய்த் தேடினார்கள். இரண்டு நாள் கழித்து, எரிந்த விமானத்தை கண்டு பிடித்தார்கள். விமானத்தில் சென்ற ஐந்து ராணுவ அதிகாரிகளும் பரிதாபமாக எரிந்து போயிருந்தார்கள்.


அந்த மருத்துவனின் ஈமச் சடங்குகளை நான் செய்தேன். அவன்: என் 26 வயது தம்பி.
இந்த விவரங்கள் இப்போதைக்குப் போதும்.   இனி கவிதை வடிவில் உள்ள கடிதத்தைத் தருகிறேன்..
*                   *           
Dear Sir: A poem by a young Indian Army Officer..
A brief note: It has been composed by a fourth generation, 24-year old career officer in the Indian Armed Forces, spurred by the report of the Sixth Pay Commission and an insensitive article written by a 'respectable' citizen of the country in a national daily on the armed forces and the pertinence of the Sixth Pay Commission therein.

This free-flowing verse has not been edited; it's to ensure that the originality of the angst is maintained. After all, when you are in pain, the language of expression is the last thing in your mind --Chandra
 ______________________
Dear Sir!
How you play with us, did you ever see?
 At Seven, I had decided what I wanted to be;
 I would serve you to the end,
 All these boundaries I would defend.


 Now you make me look like a fool,
 When at Seventeen and just out of school;
 Went to the place where they made "men out of boys"
 Lived a tough life …sacrificed a few joys…


In those days, I would see my 'civilian' friends,
 Living a life with the fashion trends;
 Enjoying their so called "College Days"
 While I sweated and bled in the sun and haze…
But I never thought twice about what where or why
 All I knew was when the time came, I'd be ready to do or die.