Showing posts with label புத்தக அலமாரி.... Show all posts
Showing posts with label புத்தக அலமாரி.... Show all posts

July 24, 2014

தாத்தாவின் புகழ் பெற்ற சுருட்டு-ராஸ்டன்


அமெரிக்க எழுத்தாளர்  லியோ ராஸ்டன்  நகைச்சுவைப் பொன்மொழிகள், குட்டிக்கதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள் தவிர நிறைய கட்டுரைகளும்  ஹாலிவுட்டில் 5, 6 திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ’புக்-சேலி’ல்  இவர் எழுதிய Passion and Prejudices என்ற புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருந்த ஒரு  கட்டுரையைத் தமிழில் தருகிறேன். அவர் கொடுத்திருந்த தலைப்பு: THE CIGAR: A FERVENT FOOTNOTE TO HISTORY
----------------------------------
கட்டுரையைப் படிக்க ஆரம்பிக்குமுன் ஒரு சுவையான துணுக்கு. இந்த புத்தகத்தை  நான் வாங்கிய விலை: 15 சென் ட்டுக்கும் குறைவு (ரூ.10). பிறகு ஒரு நாள், ராஸ்டனின் மற்ற புத்தகங்கள் ஏதாவது வாங்கலாமா என்று வலை வீசினேன்.  
1978–ல்  வெளியான  Passion and Prejudices புத்தகத்திற்கு  (புதுப் புத்தகம் -முதல் பதிப்பு)  ஒரு புக் ஸ்டோர் வைத்திருந்த  விலை:(படத்தைப் பார்க்கவும்!)  அதிர்ச்சி அடையாதீர்கள்: டாலர் 3272.97.  தபால் கட்டணம்  தனி!
-------------------------------------
இனி சுருட்டுக் கட்டுரைக்குப் போகலாம். சிகரெட் பிடிப்பவர்களின்  சிகரெட் மோகத்தை( அல்லது வெறியை)  புகை பிடிக்காதவர்களால் அறிந்து கொள்ள முடியாது. என் பதினாறாவது வயதிலிருந்து தினமும் ஒரு பாக்கெட் பிடித்து வந்தேன். இப்போது அந்த பழக்கத்தை உதறித் தள்ளி விட்டேன்.

  புகையிலையின்  மோகத்தை நான் நன்கு அறிவேன் அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது எனக்கு உள்ள அனுதாபம் ஆழமானது.
    இரண்டாம் உலகப் போரின் போது- அதாவது 40 களில்-  நடந்த சம்பவம் சிகரெட் வெறி தொடர்பானது.
    ராபின் என்பவர் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்டில் உயர் அதிகாரி. (இது அவருடைய உண்மையான பெயர் இல்லை. அவரது பேரன், பேத்தி எவராவது இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் மனவருத்தம் அடைவார்கள் என்பதால் பெயரை மாற்றி உள்ளேன்.
    ராபின், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் படித்துத் தேறி ஸ்டேட்  டிபார்ட்மென்டில் வேலைக்குச் சேர்ந்தான். சாதாரண எழுத்தர் வேலைதான். இருந்தாலும் அதில் அவன் தன் செயல் திறமையையும், மொழித் திறமையையும் காட்டி மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றான். 

March 15, 2014

ஜார்ஜ் பர்ன்ஸ் - சிரிப்புப் புத்தகம்

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர், எழுத்தாளர் ஜார்ஜ் பர்ன்ஸ். நூறு வயது வாழ்ந்தவர்.  தனது 80 வயதில் நடித்து ஆஸ்கர் பரிசைப் பெற்றவர்..
 பரிசை ஏற்றுகொண்டதும் அவர் நிகழ்த்திய சிறிய உரை:
Thank you. Thank you. Thank you. Thank you very much. This is a beautiful moment for me. You know, I've been in show business all of my life and I've loved every minute of it. And being honored tonight by getting this award proves one thing: that if you stay in the business long enough and if you can get to be old enough, you get to be new again.

 I was very fortunate to work with two fine actors like Walter Matthau and Dick Benjamin, and to be directed by Herb Ross, and a script by Neil Simon, and with a great producer like Ray Stark, and for a beautiful studio like MGM. And being surrounded by all that talent was a great break for a newcomer like myself. 

And the last picture I made was thirty-seven years ago, and making "The Sunshine Boys" was so exciting I've decided that I'm gonna make a picture every thirty-seven years. Thank you.

’ஓ,காட்’ படத்திலும்  நடித்தவர்.

அவரது புத்தகங்கள் அத்தனையும்  நகைச்சுவை புதையல்கள்தான்.  வரிக்கு வரி  கிண்டலும் நையாண்டியும்தான். அவரது   THE MOST OF GEORGE BURNS  (800 பக்கம்) உட்பட நாலைந்து  புத்தகங்கள் என்னிடம் உள்ளன.

DR, BURN'S PRESCRIPTION FOR HAPPINESS  என்ற புத்தகத்தில் அவர் எழுதியுள்ள முன்னுரை, முகவுரை, அறிமுக உரை என்று 14 பக்கம் எழுதியுள்ளார். அவற்றைத் தமிழ்ப் படுத்தித் தருகிறேன்.
 *                       *                     *
முன்னுரை: 
இதோ மற்றொரு புத்தகத்தை எழுதிவிட்டு வந்திருக்கிறேன். இது எனது ஐந்தாவது புத்தகம். ஆனால் முதல் முறையாக நான் எழுதும் முன்னுரை. மற்ற எல்லா புத்தகங்களையும் முதல் அத்தியாயத்திலிருந்து நேரடியாகத் தொடங்கி விட்டேன். ஐந்தாவது புத்தகத்தைப் பற்றி எழுதுவதால் மனதில் உற்சாகம் ஏற்படுகிறதா அல்லது முதல் முதலாக முன்னுரை எழுதுவதால் குஷி ஏற்படுகிறதா என்று  தெரியவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால் நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அதற்குக் காரணம் ஐந்தாவது புத்தகமா,  எழுதப் போகும் முன்னுரையா அல்லது நேற்று நான் சாப்பிட்ட மெக்ஸிகன் டின்னரா என்று தெரியவில்லை!
முன்னுரைகளைப் பற்றி நிறைய  ஆராய்ச்சி செய்தேன். அவை மிகவும் நீளமாகவும்  இருக்கக் கூடாது; மிகவும் சின்னதாகவும் இருக்கக்கூடாது. முன்னுரையை ரொம்பவும் சிறப்பாகவும் எழுதக்கூடாது. அப்புறம் புத்தகத்தில் உள்ள மற்ற விஷயங்கள் சுமார் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்!  முன்னுரையைப் படு தண்டமாக எழுதுவது ஒரு சாமர்த்தியமான தீர்வு. ஆனால் தண்ட முன்னுரை எழுதலாம் என்றால் அதுவும் சுலபமான காரியமில்லை, எப்படித்தான் பலரால் இதைச் செய்ய முடிகிறது என்று எனக்குத் தெரியவில்லை, 

July 08, 2012

கருத்தும் அழகு; ஆங்கில நடையும் அழகு

ஆஹா ஜோசஃப் அடிஸன்!
 நான்  கால்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஆங்கில பாட புத்தகத்தில் ஜோசப் அடிஸன் என்பவர்  ’ஸ்பெக்டேடர்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை  இடம் பெற்றிருந்தது.  அடிஸன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று  புரொபசர் கூறியது தான் இன்று நினைவில் இருக்கிறது,  பரீட்சைக்காகப் படித்தனாலோ என்னவோ அடிஸனின் கட்டுரையை அவ்வளவாக ரசிக்கவில்லை. அவரது ஆங்கில நடையைக்கூட நான் ரசித்ததாக நினைவில்லை. அந்த கட்டுரையில் வந்த ஒரே ஒரு வார்த்தைதான் நான் புதிதாகக் கற்றுக் கொண்ட வார்த்தை என்பதால் அவர் பெயரை மறக்கவில்லை. அந்த வார்த்தை:  INSTINCT!

அதன் பிறகு பல வருஷங்களுக்குப் பிறகு அவரது ஒரு சில கட்டுரைகளைப் படித்தேன். ஒரு சமயம்,  பல கட்டுரைகளிலிருந்து அழகான வாசகங்களை தொகுத்துப் போடப்பட்டப் புத்தகத்தில் ஒரு பாரா கண்ணில் பட்டது. அது அடிஸன் எழுதியது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் உள்ள கல்லறைகளைப் பற்றி  அவர் எழுதியிருந்தார். கருத்தழகும் நடையழகும் என்னைக் கவர்ந்து விட்டது. என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். சமீபத்தில் அந்த பாரா கண்ணில் பட்டது. அதைத் தமிழ் படுத்தி ‘பிளாக்’கில் போட விரும்பினேன்.  1711 வாக்கில் வெளியான ஸ்பெக்டேட்டர் பத்திரிகையின் இதழ்களை கூகுளில் பார்க்க முடிந்தது.

அடிஸனின், குறிப்பிட்ட பாராவைக் கீழே தமிழில் தந்திருக்கிறேன். அடிஸன் அளவு நான் திறமைசாலி இல்லை என்பதால்  மொழிபெயர்ப்பு சுமார்தான்.
====================
சீரிய மனிதர்களின் கல்லறைகளைப் பார்க்கும்போது, எல்லா வித பொறாமை உணர்வுகளும் மடிந்து போகின்றன. உன்னதமானவர்களின் கல்லறை வாசகங்களைப் படிக்கும்போது அனைத்து வித அற்ப ஆசைகளும் விலகிப் போகின்றன. கல்லறைகளின் மீது படிந்துள்ள, பெற்றோர்களின் துயரங்களை உணரும்போது என் இருதயம் இரக்கத்தினால் நெகிழ்ந்து உருகுகிறது. அதே சமயம் அந்த பெற்றோர்களின் கல்லறைகளைப் பார்க்கும்போது, இறந்துபோனவர்களுக்காக சோகமடைவது வீண் என்று தோன்றுகிறது. 

June 11, 2012

ஆச்சரியம்: ஆனால் உண்மை!

 கடந்த சில நாட்களாக ஒரு புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். 
அந்தப் புத்தகம்: EPIGRAMS  ANCIENT AND MODERN: HUMOROUS, WITTY, SATIRICAL, MORAL   ....
1863-ல் பிரசுரமானது  தொகுததவர் :JOHN BOOTH B.A. பக்கங்கள்: 352
கடந்த வாரம் படித்துக் கோண்டிருந்த போது ஒரு சின்ன அதிசயம்  அல்லது COINCIDENCE  நடந்தது,  

அன்று ( 6-6-12) தான்   வீனஸ்/சுக்ரன்/வெள்ளி எனச் சொல்லப்படும் கோள்  சூரியப் பாதையில் சென்றது, அடுத்து 2117-ல் தான் வீனஸ் கோள்  சூரியப் பாதையைக் கடக்கும்,
(இதற்கு முன்பு  ஜூன் 2004, டிசம்பர் 1882, டிசம்பர் 1874, ஜுன்  1769  வருஷங்களிலும் அதற்கு முன்பு பல தடவைகளிலும் கடந்து இருக்கிறது,  NASA- வில் கடந்த 7000 வருஷங்களில் அது எத்தனை தடவைக் கடந்துள்ளது போன்ற விவரங்கள் உள்ளன.) 
 ஏழாம் தேதி அன்று, இந்த  EPIGRAM   புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட கவிதை: ஜூன், 1769 -ல் வீனஸ் கடந்ததைப் பற்றி எழுதப்பட்ட கவிதை!  ஆச்சரியமான  COINCIDENCE!

அதை இங்கு தருகிறேன்:
On the beautiful Duchess of Hamilton (afterwards
Duchess of Argyll) viewing the transit of Venus in 1769,
at Glasgow University.
Duchess of Hamilton
(இது தான் அவருடைய  படம் என்று கருதுகிறேன்!)
 
They tell me Venus is in the sun, 
But I say that's a story ; 
Venus is not in the sun, 
She's in the observatory.

























May 20, 2012

ஏர் இந்தியா

 ஏர் இந்தியா இப்போது செய்தியில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது,
 ஏர் இந்தியாவிற்கு உலக அரங்கில் பிரமாதமான் இமேஜைக் கொண்டுவந்தவர் 60 களில் சேர்மனாக் இருந்த  எஸ், கே. கூக்கா ( S K KOOKA)  என்கிற திறமைசாலி. நல்ல நகைச்சுவையாளர்.  ஏர் இந்தியா ‘மகாராஜா’வை உருவாக்கியவர்.  ஏர் இந்தியா விளமபரங்களிலும் போஸ்டர்களிலும் நகைச்சுவை மிளிரும். அவர் எழுதி வெளியிட்ட  FOOLISHLY YOURS, THIS MAKES NO SENSE   ஆகிய இரண்டு நகைச்சுவைப் புத்தகங்களைப் பற்றி எழுதி இருக்கிறேன். பார்க்க: http://kadugu-agasthian.blogspot.in/2011/05/foolishly-yours.html 

ஏர் இந்தியா புதிய  வழித்தடங்களை அறிமுகப்படுத்தும் போதும்  மற்ற சமயங்களிலும் வெளியிட்ட போஸ்டர்களில் அவருடைய கிரியேட்டிவ் திறமை தெரியும்.

சுயப் பிரதாபத்திற்காக சிறிய இடைவெளி!
நான் ஒரு விளம்பரக் கம்பெனியில் பணியாற்றிவன் என்று எத்தனையோ தடவை ஜம்பமடித்துக் கொண்டிருந்தாலும், புதிதாக இந்த வலைக்கு வந்தவர்களுக்காக ( அதாவது மாட்டிக்கொண்டவர்களுக்காக!) திரும்பக் கூறுவதில்  தப்பில்லை, ( “ஹூம்.. ஏதோ ஒரு நொண்டிச் சாக்கு!:)

நான் ஓய்வு பெற்ற சமயம் எங்கள் கம்பெனியின் சேர்மனாக அவர் இருந்தார்.   ஓய்வு பெற்ற தினம் அலுவலகத்தில் மாலை போட்டு,   பாராட்டிப் பேசி பரிசு கொடுத்தார்கள். என் ஏற்புரையைச் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டு, விரிவான ஏற்புரையை ஒரு சிறு புத்தகமாகத் தயாரித்து அனவருக்கும் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தை  ஏர் இந்தி யாவின் FOOLISHLY YOURS மாதிரியே தயாரித்திருந்தேன். அதன் பிரதிகளை பம்பாயிலிருந்த படே படே அதிகாரிகளுக்கும் கூக்கா அவர்களுக்கும் அனுப்பி வைத்தேன்,
சரி, இப்போது  கிளைக் கதையிலிருந்து மெயின் கதைக்கு வருகிறேன்.

January 25, 2012

ஒரு பெண்ணின் இருதயம்

உலகத்தின் முதல் இருதய மாற்று ஆபரேஷனை வெற்றிகரமாகச் செய்த தென் ஆப்பிரிக்க டாக்டர் கிரிஸ்டியான் பர்னார்ட் ஒன் லைஃப்என்ற தலைப்பில் தன் சுயசரிதத்தை எழுதியிருக்கிறார். அதில் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட்என்ற பாகத்திலிருந்து ஒரு சில பகுதிகள் 
:
 
‘‘லாயி வாஷ்கான்ஸ்கியின் இதயம் மோசமடைந்திருந்தது. தகுந்த மாற்று இருதயம் கிடைத்தவுடன் அவருக்கு புதிய இதயத்தைப் பொருத்த காத்துக் கொண்டிருந்தோம்.


கார் விபத்தில் அகப்பட்டுக் கொண்ட டெனிஸ் டார்வல் என்ற 24 வயதுப் பெண்ணின் இருதயம் எங்களுக்குக் கிடைத்தது. இதோ டெனிஸின் தந்தை கூறுவதைக் கேளுங்கள்:

‘‘புதிய கார் வாங்கியிருந்தோம். நான், என் மனைவி, பெண் டெனிஸ், பையன் கீத் எல்லாரும் கடைத் தெருவுக்குச் சென்றோம். கேக் வாங்க என் மனைவியும் டெனிஸும் சென்றார்கள். நாங்களிருவரும் காரில் உட்கார்ந்து இருந்தோம்.

‘‘என்ன இன்னும் வரக் காணோமே?’’ என்று சொல்லிக் கொண்டே கீத் காரிலிருந்து இறங்கிப் பார்த்தான்.

‘‘தூரத்தில் வருகிறார்கள்’’ என்றான். அவன் சொன்ன சில செகண்ட்கள் கழித்து பலத்த ஓசை கேட்டது. டயர்கள் கிரீச்சிட்டன.

‘‘அப்பா... ஏதோ ஒரு கார் ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது... அப்பா, நம் டெனிஸும் அம்மாவும்தான் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...’’

அடுத்த கணம் அங்கு சென்றோம். ரோடு நடுவில் ரத்த வெள்ளத்தில் என் மனைவி கிடந்தாள். என் பெண்ணும் மயங்கிக் கிடந்தாள். அவள் முகத்தில் பலத்த காயங்கள். வாய், காது வழியாக ரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் வந்துசேர்ந்தது.

ஆஸ்பத்திரிக்கு நான் போனபோது என் மனைவி இறந்து விட்டாள் என்று கூறினார்கள். அவள் ஆம்புலன்ஸில் செல்லும் போதே இறந்து விட்டிருந்தாள்.