Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts
Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts

March 11, 2019

நான் ரசித்த எழுத்தாளர் வரிசை-1: கிஷோன்

ஈரமுள்ள வீடு
          இஸ்ரேல் நகைச்சுவை எழுத்தாளர் EPHRAIM KISHON எழுதிய ‘A  HANGING MATTER’ என்ற கட்டுரையைத் தழுவி, தமிழ் முலாம் கொடுத்து இங்கு தருகிறேன்.

                                           *                                       .
                                           *                                       *
     முதலில் ஒன்றைச் சொல்லி விடுவது முக்கியம். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.  மோட்ச உலகிலும் இயற்கையின்  நடைமுறைகளிலும்   எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.
     ஆனால் சமீபத்தில் குளிர் காலத்தின் போது இயற்கை  மீதிருந்த  மதிப்பு, மரியாதையெல்லாம் மாறிவிட்டது.
     விஸ்தாரமாகச் சொல்லுகிறேன்.  நான் சொல்லி முடிப்பதற்குள் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகும்! 
    டிசம்பர் மாதம். திங்கட்கிழமை. பொழுது புலர்ந்தது. சூரியன் பளீரென்று உதித்து உலகையே உற்சாகப்படுத்தினான். ஜன்னல் வழியாகச் சூரியனை பார்த்து  “ஆகா, வந்தாயே, என் மகாராஜனே” என்று அவனுக்குச் சின்ன வரவேற்பைச்சொன்னேன்.

     ஆயிரம் வருஷம் காத்திருந்த மாதிரி, சூரியன் தலை காட்டியதற்கு விழாவே எடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சியில் குதித்தோம். ஒரு வாரத்திற்கு மேல் துணிகளைத் தோய்க்க முடியாமல், சுருட்டி சுருட்டி மூட்டைக் கட்டி வைத்திருந்தோம். 
  
 மூட்டைகளைப் படுக்கையின் கீழே, மேஜையின் கீழே, (வேண்டாத சாமான்கள்  நிரம்பிய பரணில் (எதையும் தூக்கிப் போடாதீங்க; எந்த சமயத்தில் எந்த சாமான் உதவும்  என்று உங்களுக்குத் தெரியாது.  காதறந்த  ஊசியும் உபயோகப்படும்”-  இது என் மனைவி என்னும் அரிஸ்டாட்டிலின் தத்துவம்!)    நிறைந்து இருந்ததால் அங்கு கிடைத்த இரண்டு அங்குல இடத்தில்,  துணிகளைத்  திணித்து வைத்திருந் தோம்.
மழை காரணமாக ஜன்னல்களைத் திறக்கவில்லை. வீட்டின் தரை  சொத சொதவென்று இருந்தது. மூட்டைகளில் இருந்த துணிகளில், டவல் போன்றவை சற்று ஈரமாக இருந்தன. அதனால், அவை ஒரு ஸ்பெஷல்   வாசனையுடன் இருந்தன. (இந்த வார்த்தை சரியில்லைதான்வேறு வார்த்தையைப்  போட மனம்  வரவில்லை! - கிட்டதட்ட சர்க்கரை ஆலைகளிலிருந்து வரும் மொலாசஸ்ஸே  சந்தனமணம்  என்று நாங்கள் கருதும் அளவுக்குத் துணிகளின் வாசனை  எங்கள் மூக்கை உண்டு, இல்லை என்று ஆக்கிவிட்டன!)
     விடிந்தது காலை. வாராது வந்த மாமணி போல சூரியன் வந்தது. யாம் செய்த தவத்தால் பளிச்சென்ற ஒளிச்சிதறலுடன் சூரியன் வந்தான்.  

October 20, 2017

தலைப்புக்குத் தவிப்பு

தலைப்புக்குத் தவிப்பு
எந்த தலைப்புகுத் நன்றாக இருக்கிறது என்பதை தீர்மானிக்கத் தத்தளிப்பது, புடவை  வாங்கும் பெண்கள் மட்டுமல்ல,, திர்ப்டைத்திற்கு ஏற்ப பெயர் வைக்கத் திணறும் கதாசிரியர்கள், மற்றும் தாங்கள் எழுதிய புத்தகத்திற்கு எந்த பெயர் வைப்பது என்பதற்கு, புத்தகம் எழுதும்போது மண்டையைக் குடைந்துக் கொண்டதை விட அதிகமாக மூளையைக் கசக்கிப் பிழியும் எழுத்தாளர்களும் கூட!    
               
1948 -1984 ஆசை
Related image     இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த போது எழுத ஆரம்பித்த நாவல். யுத்தம் முடிந்த பிறகும் ஐரோப்பவில் பல நாடுகள் போரினால் ஏற்பட்ட பலத்த பாதிப்புகளிலிருந்து முழுவதுமாக மீண்டு வர முடியவில்லை.THE LAST MAN EUROPE என்று பெயரிட நினைத்தார். ஆனால் அந்தப் பெயரில் அவருக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை.
     நாவலை எழுதி முடித்த வருஷம்1948.  அவருடைய புத்தகத்திற்கு 1984 என்று வைத்து விட்டார்.   புது மாதிரியான தலைப்பாகவும் அது அமைந்துவிட்டதுடன் நல்ல புகழ் பெற்ற புத்தகமாகவும் அமைந்து அவருக்குப் புகழை அள்ளித் தந்தது. 65 உலக மொழிகளில் வெளி வந்துள்ளது.  தொடர்ந்து விற்பனையில் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது. அட்டைப் படம் மட்டும் 42 விதமாக வந்துள்ளதாம். 

September 09, 2017

ஒரு சுவரும் நான்கு காதுகளும்

இஸ்ரேல் நாட்டு எழுத்தாளர்  எஃப்ரெய்ம் கிஷோனின்   (EPHRAIM KISHON) நகைச்சுவை கட்டுரைகளைப் பற்றியும், அவர் எழுதிய Mr. BLOT புத்தகத்தைத் 
தேடி அலைந்த விவரங்களையும் (பிரபல 
நியூயார்க் ஸ்ட்ராண்ட் BOOKS எனும் பிரம்மாண்டமான புத்தகசாலையில் இருப்பது தெரிந்து, அங்கு மறுதினம்  காலை சென்று  தேடிய போது,முன்னாள் இரவு ஷாப் மூடும் நேரத்தில் ஒருவர்  வாங்கிச்சென்று  விட்டார்  என்று  அறிந்து,  ஏமாற்றத்துடன்   திரும்பிய  விவரங்களை எல்லாம் எழுதியிருக்கிறேன். 
  அதற்கு ஈடு செய்யவோ என்னவோ சமீபத்திய BOOK SALE  ஒன்றில், அவர் எழுதிய MY FAMILY RIGHT OR WRONG  என்ற   புத்தகம்   கிடைத்தது. (விலை அரை டாலர்). 1983 –ல்  பிரசுரமானது. புது   மெருகு   குறையாமல்   இருந்தது.

    நம்பமாட்டீர்கள், அது PIERRE DANINOS என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய கட்டுரைகள் மாதிரியே,  தன்   மனைவியை  வைத்துப்   பின்னப்பட்ட  நகைச்சுவைக்  கதைகளாக  (அல்லது கட்டுரைகளாக) இருந்தன. தற்பெருமை அடித்துக் கொள்வதாகக் கருதாதீர்கள், அவை என்னுடைய கமலா, தொச்சு   கதைகளைப் போல (சுவையாக ?) இருந்தன.

 ஹீப்ரு மொழியில் 30 புத்தகங்களுக்கு மேல்   எழுதியவர் கிஷோன். இவரது புத்தகங்கள் 25 உலக மொழிகளில் வெளி வந்துள்ளன. 1983ம் ஆண்டு புள்ளி விவரம் தெரிவிக்கும் தகவல்: கிஷோனின் புத்தகங்கள் விற்பனை இரண்டே முக்கால் கோடியாம்.
 அவருடைய புத்தகத்தில் 71 கட்டுரைகள் உள்ளன. ஒரு  கட்டுரையை தமிழ்ப்படுத்தித்  தருகிறேன் - சொந்த சரக்கையும்  சேர்த்து!
###########

             ஒரு சுவரும் நான்கு காதுகளும்!! 
அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன்  நாங்கள் எப்போதும் நட்பாகத்தான் இருப்போம்.   முக்கியமாக இப்போது எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் FELIG குடும்பத்துடன்அவர்களை கண்டாலே எங்களுக்கு  எரிச்சலும் அசூயையும்  ஏற்படும்   என்கிற  உண்மையையும்  இங்கு கூறிவிடுகிறேன். அவர்களிடம் உள்ள ஒரு முக்கிய குறை ரேடியோ. அதைத் தப்பாகச் சொல்லக் கூடாது; அதைக் கையாளும் FELIG தான் முக்கியக் காரணம்.
     சரியாக சாயங்காலம் ஆறு மணிக்கு, ஆபீஸிருந்து வந்ததும், நேராக ஹால் மேஜை மேல்  வைத்திருக்கும் ரேடியோவின் காதைத் திருகுவார். வலி தாங்காமல் அது அலறும். பாவம் வாயில்லா ஜீவன். அது எவ்வளவு நாராசமாகக் கத்தினாலும், அவருக்கு கவலையில்லை. பாட்டோ, நாடகமோ, செய்தியோ எதுவாக இருந்தாலும், பயோ கெமிஸ்ட்ரி போன்ற புரியாத விஷயங்களாயினும் சரி, அவர் ரேடியோவை  நிறுத்தமாட்டார். உரக்கவும் தெளிவாகவும் அலறல் வந்தால் அதுவே அவருக்கு இன்பத் தேனாய் காதில் பாயும்.
அவர் வீட்டு ரேடியோ எங்களுக்கும் தெளிவாகக் கேட்கும். எங்கள் வீட்டில் யாரும் ரகசியம் பேச முடியாது. ந்த ரேடியோவின் கத்தலில் உரக்கப் பேசினாலே மற்றவர் காதில் விழாது என்று இருக்கும்போது ரகசியமாவது, மண்ணாவது!
     என் மனைவி அவர்கள் வீட்டிற்குச் சில சமயம் போய் வருவது உண்டு, முக்கியமாக வீட்டில் சர்க்கரை தீர்ந்துவிட்டால், ஒருகப்பை   எடுத்துக் கொண்டு, கடன் வாங்கி வரப் போவாள்.
     இப்படி போய் வந்ததும் அவளுக்கு   ஒரு முக்கிய விஷயம் அந்த ரேடியோவைப் பற்றி தெரிந்தது. மண்டையை வலிக்கும் அளவுக்கு எங்கள் வீட்டில் கேட்கும் அந்த ரேடியோவின் அலறல், அவர்கள் வீட்டில் அவ்வளவு உரக்கக் கேட்கவில்லையாம்.
     இது ஒரு புதிர். எங்கள் வீட்டுச் சுவர் ஒற்றைக்கல் சுவர். பெயருக்கு ஒரு மெல்லிய சுவர் (கான்ட்ராக்டர் இப்படிப் பல விதத்திலும் செலவைக் குறைத்திருக்கிறார்.) நம்பமாட்டீர்கள், அந்த அறையில் போய் டிரஸ் கூட மாற்றிக் கொள்ள மாட்டோம். அது கிட்டத்தட்ட  ‘ஸீ-த்ரு’ சுவர் என்றுதான் நாங்கள்   கருதுகின்றோம்! விளக்குப் போட்டுக் கொண்டு, உடை மாற்றினால் சுவரில் நிழல் விழுந்து, shadow-play திரைப்படம் மாதிரி பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரியும் என்று அஞ்சி, அந்த அறைப் பக்கமே போக மாட்டோம்.
     இதனாலும், ரேடியோ அலறலாலும் எங்களுக்கு எட்டிக்காயாக அவர்கள் இருந்தார்கள்.
      சுவர் பிரச்னைக்குத் தீர்வு இல்லை. நாம் ஒன்றும் செய்ய முடியாது அது போகட்டும்.  அந்த பாழாய்ப் போன ரேடியோவின் இம்சையிலிருந்து எப்படித் தப்பிப்போம் என்று தெரியாமல், தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தோம்.
              அப்போது அந்த அற்புதம் நடந்தது.....