சர்மாஜியும் விமான விபத்தும்
பல வருஷங்களுக்கு முன்பு
டில்லியில் நடந்த விமான விபத்தைப் பலர் மறந்திருப்பார்கள். தில்லி ராமகிருஷ்ண புரத்தில்
ஏற்பட்ட விபத்து. அந்த விபத்தில் மரணமடைந்தவர்களில் ஒருவர் பிரபல கம்யூனிஸ்ட்
தலைவர் திரு மோகன் குமாரமங்கலம்.
விமான
விபத்துக்கும் சர்மாஜிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
சர்மாஜி
அந்த கால கட்டத்தில் ராமகிருஷ்ணபுரம் அரசு குடியிருப்பில் இருந்தார். விபத்து
நடந்த தகவல் மள மளவென்று பரவியது. அதுவும் சர்மாஜியின் வீட்டிற்கு சற்று
அருகில்தான் நடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விமானம் விழுந்ததை ‘வேடிக்கை’ப்
பார்க்க ஓடினார்கள்.
சர்மாஜி
முன்யோசனைக்காரர். ஒரு நிமிஷம்தான் யோசித்தார். கீழ் வீட்டிலுள்ள பையன்
மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தது அவருக்கு நினைவு வந்தது. அவனிடம்
ஸ்டெதஸ்கோப்பையும் டாக்டர் கோட்டையும் கேட்டு வாங்கிக் கொண்டார். ஸ்டெத்தைக் கழுத்தில் மாலையாக மாட்டிக்
கொண்டார். ஸ்கூட்டரை எடுத்து விபத்து நடந்த பகுதிக்குச் சென்றார்.


