Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

August 10, 2012

பாடல்களும் நையாண்டிகளும்...

பாடல்களும் நையாண்டிகளும்...
பாடல்கள்எழுதுவது எவ்வளவு  கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் அந்த பாடலுக்கு ஒரு நையாண்டி  அவதாரம் தருவது.
என் ஓலைச்சுவடிகளிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்
பாட்டு-1:
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறி விட்டான்
மதத்தில் ஏறி விட்டான்  (வந்த நாள் முதல்...)
 ==================

நையாண்டி-1
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
ஓட்டல் மாறவில்லை
இட்லியும் வடையும் சட்னியும் சாம்பாரும்
 பொங்கலும் 
தோசையும் மாறவில்லை
PRICE- ஏற்றி விட்டான்
SIZE -ஐக் குறைத்து விட்டான்  (வந்த நாள் முதல்...)
( மற்ற வார்த்தைகள்   நினவில் இல்லை. தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது!)
=====================
பாட்டு 2:
சௌண்ட ஆஃப்  மியூசிக் திரைப் படத்தில் வந்த இந்த பாடல் மிகவும் பிரசித்தமானது,
Raindrops on roses and whiskers on kittens
Bright copper kettles and warm woolen mittens
Brown paper packages tied up with strings
These are a few of my favorite things
Cream colored ponies and crisp apple streudels
Doorbells and sleigh bells and schnitzel with noodles
Wild geese that fly with the moon on their wings
These are a few of my favorite things

Girls in white dresses with blue satin sashes
Snowflakes that stay on my nose and eyelashes
Silver white winters that melt into springs
These are a few of my favorite things
When the dog bites
When the bee stings
When I'm feeling sad
I simply remember my favorite things
And then I don't feel so bad

April 10, 2012

SOUND OF MUSIC -PARODY

SOUND OF MUSIC   திரைப்பட பாடல்கள் எல்லாம்  மிகவும் பிரப்லமானவை. அதுவும்  ஜூலி ஆண்ட்ரூஸ் ‘பாடியுள்ள RAIN DROPS என்று துவங்கும் My Favorite Things"  பாட்டு நெஞசை அள்ளும் பாடல்.

அதை இங்கு தருகிறேன். முதலில் அதை படியுங்கள்/ பாடுங்கள்!

Raindrops on roses and whiskers on kittens
Bright copper kettles and warm woolen mittens
Brown paper packages tied up with strings
These are a few of my favorite things

Cream colored ponies and crisp apple streudels
Doorbells and sleigh bells and schnitzel with noodles
Wild geese that fly with the moon on their wings
These are a few of my favorite things

Girls in white dresses with blue satin sashes
Snowflakes that stay on my nose and eyelashes
Silver white winters that melt into springs
These are a few of my favorite things

When the dog bites
When the bee stings
When I'm feeling sad
I simply remember my favorite things
And then I don't feel so bad

==========

சரி, அதே ஜூலி ஆண்ட்ரூஸ் 80-வது வயதில் பாடினால் இந்த பாட்டை எப்படி மாற்றி பாடியிருப்பார்?

Maalox and nose drops and needles for knitting,
Walkers and handrails and new dental fittings,
Bundles of magazines tied up in string,
These are a few of my favorite things.

Cadillacs and cataracts and hearing aids and glasses,
Polident and Fixodent and false teeth in glasses,
Pacemakers, golf carts and porches with swings,
These are a few of my favorite things.

When the pipes leak,
When the bones creak,
When the knees go bad,
I simply remember my favorite things,
And then I don't feel so bad.

Hot tea and crumpets, and corn pads for bunions,
No spicy hot food or food cooked with onions,
Bathrobes and heat pads and hot meals they bring,
These are a few of my favorite things.

Back pains, confused brains, and no fear of sinnin,
Thin bones and fractures and hair that is thinin,
And we won't mention our short shrunken frames,
When we remember our favorite things.

When the joints ache, when the hips break,
When the eyes grow dim,
Then I remember the great life I've had,
And then I don't feel so bad.

-----
john
    now where did that kid hide my walker? 
 ===
இந்த பாடலுக்குச் சுமார் 10-12  நையாண்டி அவதாரங்கள் உண்டு 
======================================

பின்குறிப்பு” ‘அந்த நாள் முதல்  இந்த நாள் வரை” பாட்டுக்கும்   ”அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஓட்டல் மாறவில்லை...” என்று துவங்கும் அட்டகாசமான நையாண்டி பாட்டு உண்டு. எனக்கு முழுமையாகத் தெரியாது.தெரிந்தவர்கள் எழுதலாம்! 

March 20, 2012

ஈவினிங் நேரத்திலே


ஈவினிங்  நேரத்திலே...
ஈவினிங் நேரத்திலே - சகியே
            ஈஸ்டர் விடுமுறையில்
கூவம் நதிக் கரையின் பார்க்கில்
            குஷியாய் வீற்றிருந்தேன்.
சிகரெட்டுப் புகையும் - சகியே
            ஜிம்மென் றடித்ததடி
புகைச் சுருளோட்டம் - பின்னிருந்து
            புரண்டு வந்ததடி
திரும்பிப் பார்த்தேனடி - கிளியராய்
            தெரியவில்லையடி
விரும்பும் ஓர் உருவம் - புகைக்குள்ளே
            ‘விசிபிள்ஆச்சுதடி
எங்கோ பார்த்த முகம் - ஒரு யங்
            லேட்அங்கு நின்றான்
இங்கே வந்தனையே - என்றே
            இங்கிதம் பேசலுற்றான்
கர்லிங் கிராப்அழகும் - கழுத்தில்
            கட்டிய டை அழகும்
மிர்ரர்அதைப் போல - மின்னி
            மிளிரும் பேஸ்அழகும்
மிகைப்படுத்துவானேன் - அவனோடு
            ‘மிக்சர்ஆகி விட்டேன்.
வாயிற் புகையினையே - குப்பென்று
            வானத்தில் ஊதிவிட்டு
காயும் உதடசைத்து - அவன் சொன்ன
            கதையைக் கேளடியோ
பேப்பர் மலர் அழகின் - பேஷனில்
            பேதித்து விட்டாயடி
வேப்பராய்ப் போகுதடி - என்னாவி
            வெந்து புழுங்குதடி
ஸ்பெக்ட்விழிகளிலே - என்னை
            எக்ஸ்பெக்ட் பண்ண வைத்தாய்
சஸ்பெக்ட்வேண்டாமடி - உனக்கு
            சரணம் என்றானடி
பார்க்கிங் டாக்ஒன்று - எங்கிருந்தோ
            பாய்ந்து வந்ததடி
ஆர்க்குத் தெரியாதடி - அப்பவே
            அப்ஸ்காண்ட் ஆகிவிட்டான்.
ஹார்ட்டைக் கவர்ந்து சென்ற - அந்தக்
            கள்வன் நினைவினில் கிளாத்
மார்ட்டும் பிடிக்கவில்லை - ஹேர்ஆயில்
            மணமும் சகிக்கவில்லை
வெள்ளைச் சுனோவினிலே - என்னமோ
            வெப்பத்தைக் கண்டேனடி
சள்ளை பிடித்த பெளடர் - எனக்கு
            சஞ்சலம் தந்ததடி
என்ன படித்தாலும் - மூளையில்
            ஏறுவதில்லை யடி
என் மார்க்கெல்லாமே - பரீட்சையில்
            டென்மார்க் ஆச்சுதடி
ரேஷன் குறைவது போல் - எடையின்
            ரேட்டில் குறைந்தேனடி
காசம் பிடித்தவள் போல - தினமும்
            கரையலுற்றேனடி
இன்ஜக்ஷன்செய்தாலும் - படிப்பு
            இம்மியும் வரவில்லை
கன்ஜக்ஷனும் கூடச் - சகியே
            ‘ஹார்ட்டில் நிற்கவில்லை.
ஸாரி என் சகியே - அவனைச்
            சந்தித்தே தீர வேண்டும்
மேரி பண்ண வேணும் - இல்லையேல்
            வீழ்ந்து மடிய வேணும்

(சுமார் 50 வருஷங்களுக்கு முன்பு தமிழ்ப் பத்திரிகையொன்றில் வெளியான கவிதை இது. நகைச்சுவை இன்றைக்கும் மிளிருகிறது. இதை எழுதியவரின் பெயரைக் குறித்துக் கொள்ள மறந்துவிட்டேன். அவர் என்னை மன்னிப்பாராக.)

இது மாதிரி ” These are all my favourite things" 'Jack and Jill went up the hill" "  அந்த நாள் முதல் இந்த நாள் வரை”, “Mary had a little lamb",  பாட்லகளுக்கும், : கட்டபொம்மன் வசனஙகளுக்கும் .  ஜூலியஸ் சீசரில் மார்க் அண்டனியின் உரைக்கும் பல நையாண்டிகள் உள்ளன, பின்னால் அவைகளைத் தருகிறேன்!

July 13, 2011

நேர்முகப் பேட்டிகள் - கடுகு

நேர்முகப் பேட்டிகள் ஒரு கண் துடைப்பு என்பதால், சிபாரிசு இல்லாதவர்கள் பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு குறைந்த பட்சம் சுடச்சுடவாகவாவது பதில் சொல்லித் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ளலாம். அவர்களுடைய உபயோகத்திற்காகப் பிரபல எழுத்தாளர் ஏகாம்பரம் தயாரித்துள்ள நேர்முக பேட்டித் துணைவன் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்...
      சில கேள்வி-பதில்கள்
கே:  ராமசுப்பிரமணியன். . . உட்காருங்க நீங்கதான் ராமசுப்பிரமணியன்
ப:  சேச்சே. நான் ராமசுப்ரமணியன் இல்லை.  அவனோட பாட்டி.
கே:  நீங்க தமிழ் பி.ஏ.வா? வெரி குட்.  நீங்க என்ன இலக்கியம் படிச்சிருக்கீங்கதமிழ்லே?
ப: ஷெல்லி, மில்டன், கீட்ஸ் ஆகியவர்கள் எழுதியதை.
கே:  இங்கிலீஷைத் தமிழ்லே படிச்சீங்களா?
ப:  நான் சரித்திரத்தையே நியூ மேத்ஸ்லே படிச்சிருக்கிறேனே.
கே: மிஸ்டர்., இது பேட்டி.  கன்னா பின்னாவென்று நீங்க பேசக் கூடாது.
ப:  சரி.  நான் அப்படிப் பேசவில்லை. நீங்களே அப்படிப் பேசுங்க.
கே:  நீங்க எந்த ஊர்?
ப: தம்பூர்.
கே: ஷார்ட் ஹாண்ட் தெரியுமா?
ப: தெரியும்.  கடிகாரத்தில் பெரிய முள், சின்ன முள் என்று இருக்கும்.  சின்ன முள்தான் ஷார்ட் ஹாண்ட்.
கே: இப்போ மணி என்ன?
ப: மூன்று ஜாமம் ஏழு நாழிகை இருபது குளிகை.
கே: என்னய்யா குளிகை, தளிகை?
ப: நான் தமிழ் பி.ஏ. தட் ஈஸ் ஒய் ஐ டோல்ட் யூ தி டைம் இன் டமில்.
கே: சரி. இங்கிலீஷ் டைம் என்ன?
ப: விடிகாலை நாலரை.
கே: என்னது?
ப: ஆமாம். இப்போது இங்கிலீஷ் நாட்டிலே அதுதான் டைம்.
கே: இங்கிலீஷ் டைம் இருக்கட்டும்; உன் டைம் என்ன?
ப: இன்ஸஃபிஷியன்ட் டைம்.  அதாவது போதாத காலம்!
கே:  சரி, ஏ என்பவன் ஒரு வேலையை ஏழு நாளில் செய்கிறான்.  பி என்பவன் அதே வேலையைப் பதினாலு நாளில் செய்கிறான். 
ப: அதெப்படி முடியும்!  ஏ தான் ஏழு நாளில் அந்த வேலையைச் செய்து முடித்துவிட்டானே?
கே: கணக்கைப் பூரா கேளுங்க. இவர்களில் யாரைத் திறமைசாலி என்று தேர்ந்து எடுப்பீர்கள்? ஏன்?
ப:  "ஏ' யைத் தேர்ந்தெடுப்பேன்.  "ஏ' என்றாலே தியேட்டர்ல வசூல் என்னமா ஆகிறது  தெரியுமா?  "ஏ"யின் மேல் எல்லோருக்கும் அட்ராக் ஷன். 
கே: விமானக் கம்பெனி வேலைக்காக வந்திருக்கும் உங்களுக்கு இந்தத் துறையில் முன் அனுபவம் உண்டா?
ப: உண்டு.  சின்ன வயதில் தும்பியைக் கயிற்றில் கட்டிப் பறக்க விட்டிருக்கிறேன்.  அப்புறம் காற்றாடி பறக்க விட்டிருக்கிறேன்!
கே: இதெல்லாம் பறக்கிற அனுபவமா?
ப: சின்ன வயதில் "அம்மா சாதம்!'  "அம்மா மிட்டாய்', "அம்மா புதுச் சட்டை' என்று நான் கேட்கும் போதெல்லாம், அம்மா ""இந்தப் பிள்ளை என்னமாய்ப் பறக்கிறது!'' என்று சொல்வார்கள்.  அந்த வயதிலேயே பறந்தவன் நான்!
கே: உங்களுக்கு இந்த வேலையில் எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?
ப: லஞ்சம் வாங்கக்கூடிய வேலையாக இருந்தால் ஆயிரம் ரூபாய். இல்லாவிட்டால் இருபதாயிரம் ரூபாய்.
கே: வெரி குட். நீங்க போகலாம்.
ப: சார்... மானேஜிங்  டைரக்டரின் மருமகன் மிஸ்டர் அச்சு பிச்சு வெளியே காத்திருக்கிறார்.  அவரை அனுப்பட்டுமா?
கே: அனுப்புங்கள்...ஆமாம்..அவரைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?
ப: இன்றைய பேட்டிக்குப் பிறகு அவர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்றே அவருக்குக் கடிதம் வந்திருப்பதிலிருந்து தெரிந்து கொண்டேன்.  குட் பை!