Showing posts with label விளம்பர உலகம். Show all posts
Showing posts with label விளம்பர உலகம். Show all posts

September 17, 2016

விளம்பர வாசகங்கள்

ஒரு பொருளைத் தயாரிப்பதை விடக் கடினமானது, அதைப் பிரமாதமாக விளம்பரப்படுத்துவது, விளம்பரத்தில் அந்தப் பொருளைப் பற்றி ஒரு குட்டி வாசகம் இருந்தால், அது பலரையும் கவரும்படியாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கவேண்டும்.
            சில வருடங்களுக்கு முன்பு பாப்புலராக இருந்த பல வாசகங்கள் இன்று மறைந்து போய்விட்டன.
            “தொண்டையில் கிச்..கிச்.”, “பேஷ்..பேஷ்..”, “இதை...இதை... இதைத் தா நினைச்சேன்” என்பவை எல்லாம் இப்போதும் உள்ளனவா என்று தெரியவில்லை. அவை இருந்த காலத்தில் பலரின் கவனத்தை அவை கவர்ந்தன என்பதில் சந்தேகமில்லை.
      நான் எழுதிய ஒரு விளம்பர JINGLE, 10-15 வருடங்கள் ரேடியோவிலும் டிவியிலும் சக்கைப் போடு போட்டது. காரணம் அந்த ட்யூன் அவ்வளவு சிறப்பாக அமைந்து விட்டதுதான்.  என் பாடலில் தனி சிறப்பு எதுவுமில்லை.
            இந்த விளம்பரத்தைப் பல மொழிகளில் தயாரித்துத் தர ஒப்பந்தம் செய்யப்பட்ட பம்பாய் நிறுவனம், சென்னை வந்து படப்பிடிப்பை நடத்தியது.
ஒன்றரை வரிப் பாடலுடன் விளம்பரத்தை முடிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஈ. சி ஆரில் படப்பிடிப்பு செய்ய ஏற்பாடு  கொண்டிருந்தார்கள்.

January 25, 2013

லஞ்சப் பேயே, போ!

இரண்டு ஜார்ஜியாக்கள்!

சில வருஷங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகருக்குச் சென்றேன். அங்கு சுமார் 6 மாதம் தங்கி இருந்தேன், அட்லான் நகரை ‘செமினார் சிடி’ என்கிறார்கள். வருஷம் முழுதும் ஏதாவது மகாநாடு அங்கு நடந்து கொண்டிருக்குமாம். வருஷத்தில் 1500 மகாநாடுகளுக்கு மேல் நடக்கும் என்று கேள்விப்பட்டேன்!  (இது 1995 தகவல்,) CNN, COCA COLA  நிறுவனங்களின் தலைமை இடமும் அட்லாண்டா தான்,

நான் சென்ற சமயம் அட்லாண்டா நகரில் பல கட்டங்கள்  அசுர வேகத்தில் கட்டப்பட்டு வருவதை கவனித்தேன். அந்த ஆண்டு அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருந்ததால் பல ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒலிம்பிக் துவங்குவதற்கு  முன்பே நாங்கள் ஊர் திரும்பி விட்டோம்.
அதன் பிறகு சில ஆண்டுகள்  கழித்து அட்லாண்டாவிற்கு நியூ ஜெர்சியிலிருந்து காரில் போனேன். நகருக்குள் நுழையும்  நெடுஞ்சாலையில் பிரம்மாண்ட போர்டு இருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த வாசகம்:  WE ARE PROUD OF OUR REST ROOMS!"  போர்டை ஒட்டிப் பூத்துக் குலுங்கும் அழகான நந்தவனமும்   புல்தரைகளும். வசதியான பாத்ரூம் அறைகள் கொண்ட அழகான கட்டடமும் இருந்ததது.. சுத்தம் என்றால் சுத்தம்தான். ரம்மியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அங்கு போனால் தெரிந்து விடும், அத்தனை  சிறப்பாக இருந்தது. நிச்சயமாக ஜார்ஜியா பெருமை அடித்துக் கொள்ளலாம்!
====

 பின்குறிப்பு 2: அப்படிப் பார்த்தால் இந்தியாவை விட சென்னைக்கு அதிக வசதி இருக்கிறது.  CHENNAI  யில்  A1  ( ஏ-ஒன்!)அப்படியே வருகிறதே!

(யாரங்கே பெருமூச்சு விடுவது?)

ற்றொரு ஜார்ஜியா  நாடு  மார்தட்டிக்கொண்டு 2011-ல் பல  பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தைவெளியிட்டிருந்தது.  துருக்கிக்கு அருகில் உள்ள  குட்டி நாடு ஜார்ஜியா.   அந்த விளம்பரத்தை  இங்கு தந்துள்ளேன்.  GEORGIA  என்ற தலைப்பு டிசைன் செய்யப்பட்டிருந்த விதமே வித்தியாசமாக இருந்தது, ‘ I '  எழுத்து 1 மாதிரியும்  சிவப்பு கலரிலும் இருந்தது.'
ஒரு புகழ் பெற்ற நிறுவனம் உலக நாடுகளில் லஞ்சம் எந்தெந்த நாட்டில எந்த அளவு ஏறி உள்ளது அல்லது இறங்கி உள்ளது  என்பதை கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளிட்டிருந்தது. அதில் ஜார்ஜியாவில் அரசு சேவை தொடர்பாக 3சதவிகிதம் பேர் தான் லஞ்சம் கொடுத்தார்கள் என்பதைக்   கண்டறிந்ததாகக் குறிப்பிட்டிருந்தது! 
இது முதல் தர சாதனை. (FIRST CLASS FIRST என்பார்கள்.) எண்ணில் 1, எழுத்தில்  A. அதனால்  GEORGIA வை GEORG 1A என்று போட்டிருந்தார்கள். ( விளம்பரத்தைப் பெரிதாக்கிப் படியுங்கள்!) 
 பபின்குறிப்பு 1: இந்தியாவும் இப்படி   ஒரு விளம்பரம் போட முடியும்.   INDIA வையும்  IND 1 A  என்று எழுதலாமே!

 பின்குறிப்பு 2: அப்படிப் பார்த்தால் இந்தியாவை விட சென்னைக்கு அதிக வசதி இருக்கிறது.  CHENNAI  யில்  A1  ( ஏ-ஒன்!)அப்படியே வருகிறதே!

(யாரங்கே பெருமூச்சு விடுவது?)
 *
Georgia is a sovereign state in the Caucasus region of Eurasia. Located at the crossroads of Western Asia and Eastern Europe, it is bounded to the west by the Black Sea, to the north by Russia, to the south by Turkey and Armenia, and to the southeast by Azerbaijan.

September 17, 2012

விளம்பர உலகம்-1

”ஒரு தமிழ் எழுத்தாளரான நீங்கள் எங்கள் அலுவலகத்துக்கு வெளியே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று இந்தியாவின் மிகப்பெரிய விளம்பர ஏஜென்ஸி 1983’ல் ஒரு விளம்பரத்தை டில்லி பத்திரிகைகளில் வெளியிட்டது.

மத்திய அரசில் பணியாற்றிக் கொண்டும், தமிழ் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் இருந்த நான் ஒரு பயோடேட்டா அனுப்பினேன். அதில் எனக்கு விளம்பரத் துறையில் முன் அனுபவம் பூஜ்யம் என்று குறிப்பிட்டிருந்தேன். கூடவே பிரபல நகைச்சுவை இதழான MAD MAGAZINE  பத்திரிகையின் ரசிகன் என்றும், 16 வருட தொகுப்பு என்னிடம் உள்ளது என்றும் எழுதியிருந்தேன்.

பேட்டிக்கு அழைப்பு வந்தது. போனேன். 

"தமிழில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வருகிறீர்களா?"  என்று கேட்டார்கள். 'பார்க்கிறேன், பல சமயம் வருத்தப்படுகிறேன்' என்றேன். 'ஏன்?' என்று கேட்டார் மானேஜர். 'பலசமயம் மொழி பெயர்ப்பில் பிழை அல்லது முழு அபத்தம். புரூப் தவறுகள். வார்த்தைகளைத் தவறான இடத்தில் பிரிக்கப்படுதல், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் தெரியாத ஆர்ட்டிஸ்ட்கள் எழுதும் ஹெட்லைன்களில் எழுத்துக்கள் மிகச்சிறப்பாக எழுதப்பட்டாலும், படுபரிதாபமாக எழுத்துக்குரிய 'ஷேப்'களில் இல்லாமல் உள்ளன"  என்று சரமாரியாகக் குற்றச் சாட்டுகளைச் சொன்னேன் - பல உதாரணங்களுடன்.

நீங்கள் எனக்கு  அண்ணன்
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கேட்டார்- பேச்சை மாற்றுவதற்காக: ''உங்கள் வயது என்ன?'' நான் பயோடேட்டாவில் என் வயது 50க்கு மறுபுறம்' என்று குறிப்பிட்டிருந்தேன். இருந்தும் அவர் என் வயதைக் கேட்டதும், குறும்புடன் ” என் வயது 25” என்றேன்.  உடனே அவர் எழுந்து கை நீட்டி, கை குலுக்கி, ”நீங்கள் எனக்கு ஒரு வயது மூத்த அண்ணன். என் வயது 24” என்றார். (அவருக்கு 50 ப்ளஸ் வயதுதான்.)