இருபது வருஷ சப்ளை
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் அங்கிருந்து வரும் பார்சல்களை இங்கு நாம் டெலிவரி செய்வதற்கு அவர்கள் நமக்குக் கட்டணம் செலுத்தவேண்டும்.
டில்லியில் தபால் துறை அலுவலகத்தில் சர்வ தேச பார்சல் அக்கவுண்டிங்க் செக் ஷனில் இந்த வரவு-செலவு கணக்குகள், சுமார் 50-60 நாடுகளுக்குத் தயாரிக்கப்படும். (இது சற்று சிக்கலான கணக்கு. அதிகம் விவரித்தால் குழம்பிப் போவீர்கள்.)
இந்த கணக்கு முறை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை. இதில் “இங்கிலாந்து - இந்தியா” கணக்கு மிகவும் முக்கியமானது. இங்கிலாந்து சார்பாகவும் நாமே கணக்குத் தயாரிக்க வேண்டும். சுமார் 20, 30 நாடுகளுக்குப் போகும் பார்சல்கள் எல்லாம் லண்டன் வழியாகப் போகும்; லண்டன் வழியாக வரும் (பிரிட்டிஷ் காலத்தில் அவர்கள் செய்த வழிமுறை.)
சுதந்திரம் வந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மாதிரி பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பார்சல்கள் லண்டன் வழியாக வரும்.
இதன் காரணமாக இந்தியா - லண்டன் பார்சல் கணக்கு தயாரிக்கப்படும் படிவம் மிகப் பெரியதாக இருக்கும். பெரியது என்றால் நம்பமாட்டீர்கள், கிட்டத்தட்ட இரண்டு அடிக்கு மூன்றடி இருக்கும். சற்று தடிமனான காகிதத்தில் இருக்கும். காலப் போக்கில் பெரும்பாலான நாடுகள் காணாமல் போய்விட்டன அல்லது பெயரை மாற்றிக் கொண்டன. அல்லது நேரடியாகக் கணக்குகளை அனுப்பத் தொடங்கி விட்டன.
இந்த 'பிரிட்டன்- இந்தியா' கணக்கு மாதா மாதம் தயாரிக்கப்பட வேண்டும். நான்கு காபிகள் தயாரிக்க வேண்டும். அதுவும் ஒரே ஒரு நபர் செய்யும் வேலை. ஆக வருஷத்திற்கு 48 பாரங்கள் மட்டுமே தேவைப்படும். 1950, 60 வாக்கில் எப்போதோ, என்ன அடிப்படையிலோ 1,000 பாரம் அச்சடித்து விட்டதால் (20 வருஷ சப்ளை!) தீரவே இல்லை. ரிகார்ட் ரூமில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகளில் அடியில் இருந்த கட்டுகள் அப்பளமாகப் போய் விட்டன.
புதிதாக, கச்சிதமாக, சரியான தகவல்களுடன் அச்சடிக்கலாமென்றால், கையில் இருப்பது தீரும் என்றே தோன்றவில்லை.
இந்த சமயத்தில் 1970 வாக்கில் ஒரு நாள் ஒரு சுற்றறிக்கை வந்தது. எல்லா டிபார்ட்மெண்டும் தேவையில்லாத பழைய ஃபைல்கள், ரிஜிஸ்டர்கள், பில் பண்டில்களை மூன்று நாட்களுக்குள் களைந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். அப்பளமாகிப் போன இந்த FORMS பண்டில்கள் உட்பட பல பழைய ரிகார்டுகளை அக்கவுன்ட்ஸ் ஆபீசர் களைந்து விட்டார். ‘அப்பாடா’ என்று எல்லாரும் மூச்சு விட்டோம்.
அதற்குப் பிறகு சில வாரங்கள் கழித்து, ஸ்டோர் செக் ஷனிலிருந்து ஒரு டெலிபோன் வந்தது. அதிர்ச்சிக் குண்டைப் போட்டார்கள். எந்த படிவத்தைக் களைந்துவிட்டு ‘அப்பாடா’ என்று மூச்சு விட்டோமோ, அதே படிவம் ஆயிரம் காபி அச்சகத்திலிருந்து வந்திருந்தது! நாங்கள் கேட்காமலேயே அச்சடித்து அனுப்பி இருந்தார்கள். அடுத்த இருபது வருஷ சப்ளை!!!

நீங்கள் இந்த 'வெளிநாட்டு தபால் கணக்கு' செட்டில் செய்வதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். ஆனால் 'பார்ம் அச்சடித்த விஷயம்' புதுசு.
ReplyDeleteநான் 93களில் கல்ஃபில் இருந்தபோது, பொதுவாக நாங்க (இந்தியர்கள்) கடைபிடிப்பது... ஊரிலிருந்து வரும்போதே இந்தியன் ஸ்டாம்ப்ஸ் நிறைய வாங்கி வருவோம். கடிதம் எழுதி, கவரில் வைத்து நாங்களே ஸ்டாம்ப் ஒட்டி, ரெகுலராக போகின்ற இந்தியன் ஹோட்டலில் அதற்கென உள்ள இடத்தில் வைத்துவிடுவோம். யார் இந்தியாவுக்குப் போனாலும், மொத்த கவர்களையும் எடுத்துக்கொண்டு, இந்தியாவில் லேண்ட் ஆனதும், பக்கத்து போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடுவார்கள். ரொம்ப அர்ஜண்ட் என்றால், யாரேனும் இந்தியா போனால், அவரிடம் கவரைக் கொடுத்துவிடுவோம்.
இதற்கு முன்பு, ஸ்டாம்ப் ஒட்டாமல் கவர் கொடுத்து, இந்தியா செல்பவன், ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்யணும் என்ற முறை இருந்ததாம். அது சரியாக வராததால் இப்படி மெதட்.
அதுபோல தொலைபேசிக்கும் ஒரு கள்ள மெதட் அப்போ புழக்கத்தில் இருந்தது.
நாலாயிரம் - அர்த்தத்துடன் - இந்த வேலை எந்த நிலையில் இருக்கு? ஏற்கனவே ஆயிரம் பாடல்கள் வரை முடித்துவிட்டீர்கள் என்று எப்போவோ சொல்லியிருந்தீர்களே...
ReplyDeleteநாலாயிரம் பணியை தொடரமுடியும என்று தோன்றவில்லை.
ReplyDeleteசெய்த வரையில் பகிர்ந்துகொள்ளக் கூடாதா? அதே அலைவரிசையில் மற்றவர்கள் (ஏன்... நானும் முயல்லாமே) தொடர வாய்ப்பிருக்குமே... யோசியுங்கள்.
Deleteஇதைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை. முதல் முறை! வேணாம்னு தூக்கி அடிச்சதே திரும்பி வந்ததைப் பார்த்தால் நவராத்திரிக்கு வைச்சுக் கொடுக்கும் ரவிக்கைத் துணி சுற்றுவதைப் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு நினைவில் வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். இந்தியாவில் தான் இருக்கீங்களா? அம்பேரிக்காவா?
ReplyDeleteஅமெரிக்காவில தான் இருக்கிறேன்..-கடுகு
ReplyDelete