முதலாவது சுமார் 60 வருஷத்திற்கு முன்பு கல்லாடம் என்ற புத்தகத்திற்கு முன் பக்க, பின்பக்க அட்டைகளில் அவர் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து வியந்து போனேன். முதலில் அந்த இரண்டு ஓவியங்களை இங்கு போடுகிறேன்.
சிலையின் முன்பக்கம், பின்பக்கப் படங்களை அப்படி இவ்வளவு துல்லியமாக வரைந்தார் என்று தெரியவில்ல. அவரைச்
சந்தித்துக் கேட்க எண்ணியிருக்கிறேன்,
இந்தப் படங்களைப் போட்டோஷாப்பில் OPEN பண்ணி, ஒரு படத்தை FLIP பண்ணி மற்றொரு படத்தின் மீது வைத்துப் பார்த்தேன். அப்படியே பொருந்தியது,
போட்டோஷாப், போட்டோகாபி, கணினி எல்லாம் இல்லாத காலத்தில் எப்படி வரைந்தார்? கோபுலு நிச்சயமாக் மேதைதான்!