வணக்கம்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். 1845ல் பிரசுரமான புத்தகம். பிரமாதமாக இருந்தது நகைச்சுவை. படிக்கும் போதே உள் மனதில் ’இதுமாதிரி நாமும் முயற்சி பண்ணலாமே' என்று தோன்றியது.
எழுத ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் எழுதி முடிக்கத் திட்டமிட்டேன். ஆனால் பல காரணங்களால் 10, 20 பக்கங்கள் எழுதியதும் தொடரமுடியவில்லை. அதன் பிறகு திடீரென்று `’உன்னால் எழுதிவிட முடியும்' என்று என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு ஒரே மூச்சில் எட்டு அத்தியாயங்கள் எழுதினேன். தனித் தனி எபிஸோட் மாதிரி அமைந்திருப்பதால் அத்தியாயங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.
கதையின் பெயர்: அம்புஜத்தின் அர்ச்சனைகள். அத்தியாயங்கள் ஒரு தொடர்புடன் இருந்தாலும் தனித் தனி அர்ச்சனைகளாகவும் படிக்க இயலும். கதைக்குப் படம் போட யாரைப் பிடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் இல்லாமல்கதை ரசிக்குமா என்று சந்தேகம் எற்படுகிறது/. ஓவியர் ஒருவர் அகப்பட்டு, அவரும் காலதாமதம் செய்யாமல் படம் போட்டுக் கொடுத்தால், பொங்கலன்று அந்தத் தொடரைத் துவங்குகிறேன்..
மீண்டும் அனைவ்ருக்கும் நலவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் - கடுகு




