நம் வாழ்க்கையில் பல சமயங்களில் பல தற்செயல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஏதாவது ஒரு நாள் ஒருவரைப் பற்றி நினைவுக்கு வரும். “ஆம்….கடைசியாக திருப்பதி தரிசன கியூவில்
பார்த்தோம்… அதற்கு அப்புறம் அவரைப் பார்க்கவில்லை. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை” என்று
தோன்றும். அத்துடன் அவரை மறந்து விடுவோம். 
ஆனால் மறு நாள் ஒரு  தற்செயல் நிகழ்வு ஏற்படும். தபாலில் ஒரு கடிதம்
வரும். யாரிடமிருந்து? அந்த நபரிடமிருந்து! “நலமாக இருக்கிறீர்களா? பார்த்து ஏழு வருஷம்
ஆயிற்று… என் பிள்ளைக்கு உங்கள் ஊருக்கு மாற்றலாகிவிட்டது…” என்று
கடிதம் வரும். இதைக் COINCIDENCE  என்று,
அதாவது, தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வு என்று சொல்லலாம்.
     இப்படி பல நிகழ்வுகள் எல்லாருடைய வாழ்விலும்
நடந்திருக்கும். (என் வாழ்வில் நடந்த ஒரு சிலவற்றை என் வலைப்பூவில் பதிவாகக் போட்டுள்ளேன்.)

சுமார் 40 வருஷங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில வார இதழில் ஏழெட்டுப் பக்கங்களுக்கு  நீண்ட கட்டுரை- ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள்-  வந்திருந்தது. எல்லாம் COINCIDENCES
பற்றி தான். அந்த கட்டுரையை பத்திரப்படுத்தி
வைத்திருந்தேன். பல சமயம் தேடிப் பார்த்து ஏமாற்றமடைந்திருக்கிறேன். சில நாட்களுக்கு
முன்பு, எதிர்ப்பார்க்காத ஒரு நோட்டுப் புத்தகத்தில் ‘அப்பளமாக’ அது
கிடைத்தது. ஆமாம், அது 1974’ம் வருஷம் SUNDAY  என்ற ஆங்கில வார இதழில் வந்திருந்த கட்டுரை.
நியூஸ் பிரிண்ட் காகிதம் மிகவும் பழுப்படைந்து போயிருந்தது. கட்டுரை கிடைத்தது லாட்டிரியில்
பரிசு விழுந்த மாதிரி எனக்குத் தோன்றியது. 
     போகட்டும், அந்த கட்டுரையின் தலைப்பு’ ‘WORLD OF COINCIDENCES’. எழுதியவர்: Arthur Koestle  
முதலில் Arthur Koestler பற்றி சிறு குறிப்பு தருகிறேன். இவர் 1905-ல் பிறந்தார். இவர் 1983-ல் காலமானார். இங்கிலாந்தில் வாழ்ந்தவர். நாவல்கள், மனோதத்துவப் புத்தகங்கள், கதைகள் அல்லாத பொதுவான பல விஷயங்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளவர். (நாவல்கள் 7, நாவல் அல்லாதவை 30, நாடகம்-1, சுயசரித்திரம் 6 (ஆமாம் ஆறு!) தனிப் புத்தகங்கள் எழுதியுள்ளார். பல்வேறு தொகுப்பு நூல்களுக்கும் கட்டுரைகள் எழுதித் தந்திருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறு நூல்களை ஒன்பது எழுத்தாளர்கள் தனித்தனி புத்தகங்களாக எழுதியுள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.

     இவரது புத்தகத்தில் உள்ள பல விஷயங்களைப் படிக்கும்போது இவையெல்லலாம் உண்மையாக இருக்குமா
என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான இவரைப் பற்றிய இத்தனை விவரங்களைத் தந்துள்ளேன். 
     இவரது வாழ்க்கையிலும் ஒரு COINCIDENCE நடந்துள்ளது. அது உங்களை மெய்சிலிர்க்கச் செய்யும். அதைக் கடைசியில் கொடுப்பதுதான்
சரியாக இருக்கும்.
 
     இனி,  ஆர்தர் கோஸ்ட்லரின்   கட்டுரையிலிருந்து
சில பகுதிகளைப் பார்க்கலாம்.
       WORLD OF COINCIDENCES
1            1972’-ம் வருஷம்,
            போரிஸ் ஸ்பாஸ்கியும் ராபர்ஃபிஷரும் விளையாடும் செஸ் போட்டி’யைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரச் சொல்லி, என்னிடம் ‘ சண்டே டைம்ஸ்’ இதழ் ஆசிரியர் க்ட்டார். சில வாரங்களுக்குப் பிறகு ஐஸ்லாந்தில் அந்தப் போட்டி நடக்க இருந்தது..
     எனக்குச் சிறு வயது முதலே செஸ் விளையாட்டில்
மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஆனால், சமீப கால செஸ் போட்டிகளைப் பற்றி அதிகம் தெரிந்து
வைத்திருக்கவில்லை. அது மட்டுமல்ல, ஐஸ்லாந்தைப்  பற்றியும் எனக்கு அதிகமாகத் தெரியாது. 
     எப்போதோ ஒரு சமயம் விமானப் பயணத்தின் போது ஐஸ்லாந்தில்
விமானம் மாற வேண்டியிருந்தது. அப்போது சில மணி நேரம் விமான நிலையத்தில் கழித்தேன்.
     ஆகவே, ஐஸ்லாந்தைப் பற்றியும், செஸ் விளையாட்டைப் பற்றியும் குறிப்புகளை
எடுத்துக் கொள்ள  ஜேம்ஸ் ஸ்கொயரில் இருந்த ‘லண்டன் புத்தகச் சாலை’க்குச் சென்றேன். முதலில் செஸ் புத்தகத்தை எடுப்பதா அல்லது  ஐஸ்லாந்து புத்தகத்தைத்
தேடுவதா என்று ஒன்றிரண்டு நிமிஷம் யோசித்தேன்.  நான் நின்றுக் கொண்டிருந்த புத்தக ஷெல்ஃபுக்கு
அருகில் ‘C’ வரிசைப் புத்தகங்கள் இருந்ததால், செஸ் புத்தகங்களை
பார்க்க ஆரம்பித்தேன். 20,30 புத்தகங்கள் இருந்தன. முதன் முதலில் கண்ணில்பட்டது ஒரு
தலையணை ‘சைஸ்’ புத்தகம், தலைப்பைச் சொன்னால் அசந்து போய்
விடுவீர்கள். ( நான் அசந்ததால் அப்படிச் சொல்கிறேன்)  
தலைப்பு: செஸ் விளையாட்டு -ஐஸ்லாந்திலும்,
ஐஸ்லாந்து இலக்கியங்களிலும்!
 செஸ்ஸும  ஐஸ்லாந்தும்
கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவை.
 ஆனால்,  இப்படி ஒரு புத்தகத்தை ஒருவர்
எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை எழுதியவர் WILLARD FISKE! புத்தகம் இத்தாலியில் பிரசுரமானது. 
இம்மாதிரி தற்செயல் நிகழ்வுகள் நிறைய நடப்பதால், அவைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, நினைவிலும் வைத்துக் கொள்வதில்லை.
இம்மாதிரி தற்செயல் நிகழ்வுகள் நிறைய நடப்பதால், அவைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, நினைவிலும் வைத்துக் கொள்வதில்லை.
·      
       *          * 
      Dame Rebacco West  என்னும்
பெண்மணி எழுதிய கடிதத்தில் உள்ள தகவலை தருகிறேன். அவர் பிரபல  Nureன்brug Trials  பற்றி சில விஷயங்களைத் தேட ’ராயல் இன்ஸ்டிட்யூட் ஆப் இண்டர் நேஷனல் அப்ஃபேர்ஸ்’ என்ற அமைப்பின்
நூல் நிலையத்திற்குச் சென்றார்.
அவர் எழுதியதை அப்படியே தருகிறேன்: “ஃபிரிட்ஷ் (FRITSCHE) என்ற ஒரு குற்றவாளியை பற்றிச் சில விவரங்களைத் திரட்ட முற்பட்டேன். அங்கு ஏராளமான ஆவணங்கள், வழக்கு விவரங்கள், கோர்ட் தீர்ப்புகள் என்று இருந்தன. ஆனால் அவைகளை சரியாக பட்டியலிடப்படவில்லை. வரிசையாக பல ஷெல்ஃப்களிலும் பல ‘பைண்ட்’ செய்யப்பட்டத் தொகுப்புகள் இருந்தன. உதவி நூலகரிடம் என் தேவையைச் சொன்னேன். இந்த ஷெல்ஃபில் பாருங்கள் என்று கைகாட்டி விட்டார். வேண்டா வெறுப்பாக அருகிலிருந்த ஷெல்ஃபில் சும்மா கையைப் போட்டு, கையில்பட்ட புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. எந்த வழக்குப் பற்றித் தேடிக் கொண்டிருந்தேனோ, அந்த வழக்கு விவரங்கள் பகுதியாக அது இருந்தது மட்டுமல்ல, நான் திறந்த பக்கத்தில் FRITSCHE பற்றிய விவரங்களூம் இருந்தன. முனைப்போடு ஷெல்ஃப் ஷெல்ஃபாகத் தேடிய போது கிடைக்காத புத்தகம், சும்மா வெறுமனே அலட்சியமாக கைய்யைப் போட்ட போது ‘இதோ இருக்கிறேன்’ என்று சொல்லுவது போல் என் கையில் அகப்பட்டது. என்னை அறியாத ஏதோ ஒரு சக்தி அந்த குறிப்பிட்ட ஷெல்ஃபில் என்னை நிற்க வைத்து, குறிப்பிட்ட புத்த்கத்தில் கையைப் போட வைத்தது."

       *        
*
ஒருவர் விழுந்தார்;
ஒருவர் இழுத்தார்
     அடுத்து, கண நேரத்தில் நடந்த ஒரு அற்புதத்தைக் கூற
விரும்புகிறேன். 
1971’ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஒரு நாள், லண்டன் ‘சப்வே’ ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம். ஒரு கட்டடக் கலை நிபுணர் (சற்று பிரபலமானவரும் கூட),ஏதோ ஒரு மன உளைச்சல் காரணமாக ரயிலுக்கு முன் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளவதற்கு சப்வே ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயில் வேகமாக நுழைந்த கணம் தண்டவாளத்தில் விழுந்தார்.
ஆனால் ரயிலை சட்டென்று நிறுத்தி விட்டார் டிரைவர். அவர் அவ்வளவு சீக்கிரமாக நிறுத்தியது மிகவும் அசாதாரண சாதனை. கிட்டத்தட்ட 2,3 மூன்று நிமிஷத்திற்கு முன்பேயே - அதாவது அந்த ஆசாமி விழுவதற்கு முன்பே நிறுத்தி விட்டார்.

     அந்த
கட்டிடக் கலை  நிபுணர் அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துக்
கொண்டார். 
    இந்த சம்பவம் பற்றி, அந்த ’சப்வே’ நாயகனின்
உறவினரொருவர் (நான் எழுதிய The
Roots of coincidence  என்ற புத்தகத்தைப் படித்திருந்த வாசகர் ) எனக்கு  எழுதிய கடிதத்தில் உள்ள விவரங்கள்
வியப்பானவை.
வியப்பானவை.
     அவர் எழுதியது:  “இந்த சம்பவம் நிகழ்ந்த
சில நாட்கள் கழித்து அவருக்கு சிகிச்சை செய்த டாக்டர்களில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவர் என்னிடம், “சரி… இந்த கேஸின் முழுக் கதையும் உங்களுக்குத்
தெரியுமா? இந்த ஆசாமி ரயிலின் முன் விழுந்ததைப் பார்த்து டிரெயின் டிரைவர் உடனே பிரேக்கைப்
போட்டார் என்பதெல்லாம் சரடு.
     ரயிலின் முன் அவர் விழுவதற்குச் சில கணங்களுக்கு
முன்பு யாரோ, ஒரு பயணி, அவசரச் சங்கிலியைப் பிடித்து இழுத்திருக்கிறார்.   அந்த பயணியிடம் அபாயச் சங்கிலி இழுத்தது பற்றி ரயில்வே
அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். “காரணமில்லாமல் ஏன் இழுத்தீர்கள்? “ என்று குடைந்தார்கள்.
அவர் உட்கார்ந்த பெட்டியிலிருந்து வெளியே பிளாட்பாரத்தைப்  பார்த்திருக்க முடியாது. 
”ஏன் சங்கிலி இழுத்தேன்’ என்று எனக்குத் தெரியவில்லை” என்கிற மாதிரி அவர் கூறிவிட்டாராம் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவரை அந்த கணம் இயக்கி இருக்கிறது.”
* * *
”ஏன் சங்கிலி இழுத்தேன்’ என்று எனக்குத் தெரியவில்லை” என்கிற மாதிரி அவர் கூறிவிட்டாராம் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவரை அந்த கணம் இயக்கி இருக்கிறது.”
* * *
     ஒரே சமயம் பல தற்செயல் நிகழ்ச்சிகள் நடப்பது
அபூர்வம். 1944’ம் வருஷம் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
   சந்தேகத்தை ஏற்படுத்திய  சங்கேத வார்த்தைகள்.
'டெய்லி டெலிகிராஃப்' என்ற லண்டன் தினசரியில் குறுக்கெழுத்துப் போட்டி தினமும் வெளியாகும். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம், ஐரோப்பாவில் போர் துவங்கிய தேதிக்கு முன் தினம் ((ஜூன் 6, 1944) இந்த குறுக்கெழுத்துப் போட்டியில் வந்த சில வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள்தான். ஆனால் பின்னால் வெளியான சில தகவல்கள் அவைகளுக்கு மிகப் பெரிய முக்கியத்துவத்தைத் தந்துவிட்டன

     விவரமாகப் பார்க்கலாம். யுத்தங்களின் போது ராணுவத்தினர்
பலவித சங்கேத வார்த்தைகளை (CODE WORDS)  உபயோகிப்பார்கள்.  இவை மகாமகா ரகசிய வார்த்தை களாக வைத்திருப்பார்கள். 
படையெடுப்பதற்கு செய்யப்பட்ட எல்லா ஏற்பாடுகளுக்கும் OVERLOAD என்ற சங்கேதப் பெயரை வைத்திருந்தார்கள்.
படையெடுப்பதற்கு செய்யப்பட்ட எல்லா ஏற்பாடுகளுக்கும் OVERLOAD என்ற சங்கேதப் பெயரை வைத்திருந்தார்கள்.
     கப்பல் படை செய்ய வேண்டிய செயல் திட்டங்களுக்கு
NEPTUNE  என்றும்,
அமெரிக்க விமானங்கள் இறங்க வேண்டிய இரண்டு கடற்கரை பகுதிகளுக்கு UTAH என்றும் OMAHA
என்றும் ரகசியப் பெயரிட்டிருந்தார்கள்.
யுத்தத்திற்காக செயற்கைத் துறைமுகம் அமைத்து இருந்தார்கள். அதற்கு MULBERRY என்று பெயர் வைத்திருந்தார்கள். 
     இப்போது குறுக்கெழுத்துப் போட்டிகளைப் பார்க்கலாம். ’டெய்லி டெலிகிராஃபி’ல் மே 3’ம் தேதி வந்த 5775 எண் போட்டியில் போட்டியின்
முடிவில் ஒரு விடையில் UTAH வந்தது. மே 23’ம்
தேதி வந்த விடையில் OMAHA . வந்தது. மே 31 ம் தேதி வந்த விடையில் MULBERRY 
வந்தது. ஜுன் 2 ம் தேதி,
இரண்டு முக்கியமான சங்கேத வார்த்தைகள் NEPTUNE
மற்றும் OVERLOAD வந்தன. அடுத்த 4 தினங்கள் கழித்து போர் துவங்கிய போது. இந்த ஐந்து
சங்கேத வார்த்தைகள்தான் உபயோகப்படுத்தப்பட்டன. 
     எப்படி இந்த ஐந்து வார்த்தைகளும் குறுக்கெழுத்துப்
போட்டிகளின் விடைகளில்  அதுவும் போர் நடவடிக்கை
துவங்குவதற்கு  சில நாட்களுக்கு முன்பு வந்தன  என்பதை ராணுவ அதிகாரிகள் விசாரிக்க முற்பட்டார்கள். முதலில் குறுக்கெழுத்துப் போட்டியைத்
தயாரித்த நபரிடம் விசாரணை செய்தார்கள். லியனார்ட் என்றும் அந்த நபர் ஒரு பள்ளி ஆசிரியர்.
சுமார் 20 வருடங்களுக்கு மேல் ’டெய்லி டெலிகிராஃப்’பின் குறுக்கெழுத்துப் போட்டியைத் தயாரித்து
வருபவர். அவர் உபயோகித்த இந்த வார்த்தைகள், ராணுவ சங்கேத வார்த்தைகள் (CODE WORDS)  என்பது
தெரியாது. “எப்படி அந்த சங்கேத வார்த்தைகள் என் மண்டைக்குள் தோன்றின என்பது எனக்குத்
தெரியாது’ என்று கூறினார்!
·      
       *          * 
   ROOTS OF COINCIDENCE  என்ற
தலைப்பிலும் Arthur Koestler ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த பதிவில் வந்திருப்பவை அவரது The  Challenge of Chance ’ என்ற புத்தகத்தில் உள்ளவை.``
     இந்த
பதிவின் துவக்கத்தில், ஆர்தர் கோஸ்ட்லரின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு coincidence  பற்றி
கடைசியில் எழுதுகிறேன் என்று தெரிவித்திருந்தேன். பார்க்கப் போனால், இதில் சிறு மாற்றம்
செய்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்டதல்ல இந்த COINCIDENCE.  அது அவரது மரணத்தில் ஏற்பட்டது!
     அவரும், அவரது முப்பது வருட துணைவியாரும் ஒரே
நாளில், வீட்டு சோபாவில் பக்கத்துப் பக்கத்தில் உட்கார்ந்தபடியே விஷமருந்தி தற்கொலை
செய்துக் கொண்டார்கள்!
     “என்
கணவரைப் பிரிந்து என்னால் வாழ முடியாது”
அவரும் ஒரு குறிப்பு எழுதியிருந்தாராம்.  இருவரும் ஒரு நாள் கலை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். அதற்கு முன்,   வீட்டு பணிப்பெண்ணுக்கு ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டார்: “எங்களைப் பார்த்ததும் நீ போலீஸுக்கு தகவல் கொடு” என்று
அதில் எழுதியிருந்தார்.
கோஸ்ட்லரின் தற்கொலை சாசனம் மிக அற்புதமான ஆங்கில நடையில் நெஞ்சைத் தொடும் வாசகங்களாக எழுதப் பட்டிருக்கிறது. உணர்ச்சிமிக்க அதைத் தமிழ்ப்படுத்திப் போட மனம் வரவில்லை!.
##########
கோஸ்ட்லரின் தற்கொலை சாசனம் மிக அற்புதமான ஆங்கில நடையில் நெஞ்சைத் தொடும் வாசகங்களாக எழுதப் பட்டிருக்கிறது. உணர்ச்சிமிக்க அதைத் தமிழ்ப்படுத்திப் போட மனம் வரவில்லை!.
##########
                                                        
-
தற்கொலை சாசனத்தையும் போட்டிருக்கலாமோ! மெய்சிலிர்க்க வைத்த சம்பவங்கள். அனைத்தையும் எல்லோராலும் நம்ப முடியாது. ஆனால் நான் நம்புகிறேன். இம்மாதிரித் தற்செயல்கள் பல எனக்கும் நடந்திருக்கின்றன என்பதே காரணம்.
ReplyDeleteஆர்தர் கோஸ்ட்லரின் வாழ்க்கையில் நடந்த கோஇன்சிடென்ஸ் சரியாகப் புரியலை கடுகு சார். மற்றவற்றை ரசித்தேன்.
ReplyDeleteநமக்கும் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் (இன்றைக்கு காலைல பேசணும்னு நினைத்தேன்.. நீயே போன் பண்ணற என்பதைப்போன்றாவது). ஆனால் நாம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை.
Geetha Sambasivam அவரகளுக்கு, தற்கொலை சாசனம் மனதை உருக்கியது. மிகவும் DEPRESS ஆக்கியது. ஆகவேப் போடவில்லை.
ReplyDelete-கடுகு
நெல்லைத் தமிழன் அவர்களுக்கு,இதை எழுதலாமா வேண்டமா என்ற குழப்பத்தின் காரணமாகத் தெளிவாக எழுதவில்லை என்று நினக்கிறேன். ஆர்தர் தன்னுடய தற்கொலை சாசனத்தை, தன் மனைவிடம் முன்னதாகவே கொடுத்து விட்டார். அவர்
ReplyDeleteமனைவியும் தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதை எழுதி வைத்துள்ளளார்.. இரண்டு பேரும் சோபாவில் பக்கத்துப் பக்கதில் அமர்ந்து விஷமருந்ததி இருக்கிறார்கள். இது அவர்களகளாக ஏற்படுத்திக் கொண்ட ‘COINCIDENCE'.
அப்போ ஆர்தருக்கு தன் மனைவியும் தற்கொலை செய்துகொள்ளப்போவது தெரியாதா? மனைவிக்கு மட்டும் கணவனின் முடிவு தெரியுமா? (ஒருவேளை, கணவன் இறக்காமலிருந்திருந்தால், அதாவது விஷம் வேலை செய்யாமலிருந்திருந்தால் நிலைமை என்ன?).
Deleteவாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில், அதாவது கடமைகள் முடிந்தபிறகு, கொஞ்சம் உடல் நிலை தளரும்போது இந்த மாதிரி எண்ணங்கள் வருவது சகஜமா? அப்போது இறப்பைப் பற்றியே மனது நினைக்குமா?
உங்கள் பின்னூட்டங்கள் அனானிமஸ் என்றே வருகின்றன.....
நன்று நன்றி
ReplyDeleteமுரளீதர ஸ்வாமிஜி ஒன்று சொல்கிறார். There is nothing called coincidence. There is only incidence. அதாவது, அது தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயம். தற்செயலாக நடப்பதில்லை. நீங்கள் ஏதோ ஒரு நபரை பல வருடங்களுக்குப் பிறகு, சம்பந்தமில்லாத ஒரு ஊரில் சந்தித்தால், அது தற்செயல் அல்ல. நீங்களும் அவரும் சந்திக்கப் போவதென்பது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுவிட்டது. அது விதி. நமது செயல்களினால், நமது எதிர்காலத்தின் விதி மாறலாம். நாம் நல்ல கர்மாக்களை செய்தால், நடக்க வேண்டிய கெட்ட விஷயம் தவிர்க்கப்படலாம். அல்லது, குறைக்கப்படலாம்.
ReplyDelete