May 23, 2016

லட்ச தீபம்


சென்னை ஜி.பி.ஓ.வில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த வருடங்களில் செங்கல்பட்டிலிருந்து தினமும் போய் வந்து கொண்டிருந்தேன்.
ஒருநாள் வேலை முடித்துவிட்டு வழக்கம்போல் பீச் ஸ்டேஷனி லிருந்து புறப்படும் காஞ்சிபுரம் பாசஞ்சரில் ஏறப் போனேன். எல்லாப் பெட்டியும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டிருந்தது. கல்யாண சீசன்களில் இப்படி கூட்டம் அதிகமாக இருப்பது சகஜம். ஏதோ ஒரு மூலையில், கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். ரயில் கோட்டை ஸ்டேஷன் போயிற்று. அங்கு அலைமோதுகிற மாதிரி கூட்டம் பெட்டிகளில் ஏறியது. பூங்கா,  எழும்பூர் ஸ்டேஷன்களில் மேலும் பயணிகள் ஏறினார்கள். பெரும்பாலும் குடும்பப் பெண்கள்.
“என்ன இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே...  நிறைய முகூர்த்தங்களா?” என்று கேட்டேன், ஒரு பெண்மணியிடம்.

“கல்யாணமுமில்லை, ஒண்ணுமில்லை. இன்னிக்கு ராத்திரி திருக்கழுக் குன்றத்தில் கோவிலில் லட்சதீபத் திருவிழா...ரொம்ப விசேஷம். 12 வருஷத்து ஒரு தபா வர்ற விழாவாச்சே! அதுக்குத்தான் அல்லாரும் போய்க்கிட்டு இருக்கோம்” என்றார்.

May 13, 2016

ஒரு காக்கா கதை

( இது கதையல்ல, நிஜம்)

கணிதம் சம்பந்தமாக பல புத்தகங்கள் எழுதியுள்ள HOWARD W. EVES என்பவர் IN MATHEMATICAL CIRCLES என்ற தலைப்பில் ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். இது கணிதத் துணுக்குகள் புத்தகம். கணிதம் சம்பந்தமான சுவையான சம்பவங்கள், வியக்கத்தகு உண்மைகள், மனதைத் தொடும் வரலாற்றுக் குறிப்புகள் என்று! எல்லாம் கால் பக்கம், அரைப் பக்கம்தான். 

மொத்தம் சுமார் 1500 குட்டிக் கட்டுரைகள். அவற்றிலிருந்து ஒரு கட்டுரையைத் தருகிறேன். ஹோவார்ட் எழுதியதை அப்படியே மொழி பெயர்த்துத் தருகிறேன்.                                 *                               *                             
எண்களைப் பற்றி அறிந்திருந்த ஒரு காகத்தின் உண்மையான, மனதைத் தொடும் தகவல் ஒன்று உள்ளது. ஸ்காட்லாந்தில் ஒரு செல்வந்தர் பெரிய மாளிகையில் வசித்து வந்தார். அவருடைய எஸ்டேட்டில் ஒரு டவர் கட்டியிருந்தார். பங்களாவைக் கண்காணிக்க காவலாளிகள் பயன்படுத்து வதற்கான ‘வாட்ச் டவர்’ அது.

அந்த டவரின் உச்சியில் ஒரு காகம் கூடு கட்டிவிட்டது. அத்துடன் விடவில்லை. சதா சர்வ காலமும் காது கிழிய கத்திக் கொண்டிருந்தது. கூட்டில் முட்டை இட்டிருக்கக் கூடும். அந்த டவருக்குள் சென்று மேலே ஏறி அதை விரட்டப் பல தடவை அந்த செல்வந்தர் முயற்சி செய்தும் தோல்வியுற்றிருக்கிறார். எப்படி


May 04, 2016

டில்லி நார்த் அவென்யூவில்

என் வாழ்க்கையில் நடந்த சம்பவம். (1964ல் நடந்தது.) டில்லியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் குடியிருந்தோம். குடி என்றால் தனியாக இல்லை. எம்.பி யின்  நார்த் அவென்யூவில் இருந்த அபார்ட்மெண்டில் இருந்தோம்.    எம். பி. நிரம்பப் படித்தவர். டாக்டர் பட்டம் பெற்றவர். மொழிகளில் ஆர்வம் உடையவர். என்னை விட மூத்தவர். பெண்மணி. திருமணம் ஆகாதவர். (பின்னால் அவர் ராஜாங்க மந்திரியும் ஆனார்.) எம்.பி.  ஒரு அறையைத்    தனக்கு என்று வைத்துக் கொண்டு வீடு முழுவதையும் எங்களுக்குக் கொடுத்து விட்டார். ஒரு குடும்பமாக இருந்தோம் என்று சொல்லலாம்அவருக்குத் தமிழ் மொழியைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகத் தான் அவருடைய அறிமுகமும், தொடர்பும் எனக்கு ஏற்பட்டது. பின்னால் அவர் எங்களைத் தன் வீட்டிற்கே குடிவந்து விடும்படி சொன்னார். நாங்களும் அதன்படியே அவரது வீட்டிற்குக் குடி போனோம். 
இந்தப் பதிவு அவரைப் பற்றி அல்ல. என் வாழ்க்கையில் கடவுள் கை கொடுத்த சம்பவத்தைப் பற்றியது.

அந்த எம்.பி.யின் பிளாட்டில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்திருப்போம். ஒரு நாள் அவர் என்னிடம் “என் பெற்றோர் என்னுடன் தங்க வருகிறார்கள். அதனால் நீங்கள் ஒரு இடம் பார்த்து காலி செய்து விடுங்கள்” என்றார். தேதியும் சொல்லிவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் தன் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். “நான் இன்ன தேதிக்கு அப்பா அம்மாவுடன் வருகிறேன். ஆகவே அதற்குள் நீங்கள் காலி செய்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.