February 26, 2017

பேனா படுத்திய பாடு - பாகம் 2


புதுப் பேனாவை எடுத்து வீட்டுப் பாடம் எழுத ஆரம்பித்தேன்இரண்டு வரிகள் கூட எழுதி இருக்க மாட்டேன்பேனா எழுதவில்லைஎன்ன செய்வது என்று தெரியவில்லை.
அம்மாபேனா எழுதவில்லைகடையில் எழுதிப் பார்த்தேன் சூப்பராக எழுதியது...”

கொஞ்சம் கையை உதறிப் பார்இங்க் இரண்டு மூன்று சொட்டு வந்து விழும்.  அதற்கப்புறம் எழுதும்நிப்பில் இங்க் உலர்ந்து போயிருக்கும்.” என்றாள் அம்மா.
உதறினேன்உதறினேன்கையில் வலி வந்ததே தவிரபேனாவிலிருந்து இங்க் வரவில்லைபார்த்துக் கொண்டிருந்த அம்மா, “முட்டாள்... பேனாவில் இங்க் தீர்ந்து போயிடுத்து...”  என்றாள்.
“நூர் இங்க் போட்டுக் கொடுத்தார் அம்மா.”
 “கொஞ்சம் எழுதறதுக்கு இரண்டு சொட்டு போட்டிருப்பான்வீட்டில் கட்டைப்பேனா இங்க்  இருக்கிறதுஅதைப் போட்டால் பேனா எழுதாது.  போய் சின்ன புட்டி இங்க் வாங்கிக் கொண்டு வா” என்றாள் அம்மா,.
நூர் கடைக்கு ஓடினேன்அவர் ஒரு சின்ன புட்டி இங்க் கொடுத்ததுடன் இன்னொரு இங்க் வில்லையையும் கொடுத்தார்.
ஐயய்யோ   ... வில்லை வேண்டாம்.  அது வில்லை இல்லை ; அது  தொல்லை.  ” என்றேன்
(அந்த வயதிலேயே வார்த்தைகளுடன் விளையாடும் திறமை வெளிப்பட்டதுவிளையும் பயிர்! :)
    வீட்டுக்கு வந்து அம்மாவிடம் கொடுத்தேன்அம்மா, பேனா கழுத்தைக் கழட்டிகவனமாக குழந்தைக்குப் பாலாடையால் பால்  புகட்டுவதுபோல் மையை நிரப்பிலாகவமாகத் திருகிலேசாக இரண்டு உதறு உதறி பேப்பரில் ஒரு கோடு போட்டாள்.
அம்மா... அம்மா... இப்படிக் கொடுநான் எழுதிப் பார்க்கிறேன்.” என்று பிடுங்கிக் கொண்டு எழுதினேன்அடாடா.... அப்படியே வழுக்கிக் கொண்டு போயிற்று.
மறுநாள் பள்ளிக்கூடத்திற்குப் பேனாவை வைத்துக் கொண்டு புறப்பட்டேன்பேனாவின் கிளிப்பை விட என் முகம் பளபளப்பாக மாறி இருந்ததுகாரணம்பேனா தந்த மகிழ்ச்சி

February 19, 2017

பேனா... பேனா... பேனா... (முதல் பாகம்)

        சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு பேனா பரிசாக அளித்தார். அதாவது, வேறு வழியின்றி அளித்து விட்டார். என்ன ஆயிற்று ன்றால்,  என்னுடையகமலாவும் நானும்புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுத் தரும்படி அவர் கேட்டார்ர். புத்தகம் கொடுத்த கையோடு அவர் தன் பேனாவையும் கொடுத்தார். நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தபோது அவரது பேனா அனாயசமாகப் பேப்பரில் வழுக்கிச் செல்வதை உணர்ந்தேன்.
சார், உங்கள் பேனா அட்டகாசமாக எழுதுகிறது. இது என்ன பேனா?” என்று கேட்டேன். ‘என்ன பேனாவாக இருந்தால் என்ன..? என்னுடைய அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்என்று சொன்னார். பாதி உண்மையாகவும், பாதி பாசாங்காகவும் வேண்டாம் சார்,, விலை உயர்ந்த பேனா மாதிரி இருக்கிறது. நான் சும்மா சொன்னேன்.” என்றேன்.  (இப்படிச் சொன்னதுதான் சும்மாஎன்பதை  இப்போது ஒப்புக் கொண்டு விடுகிறேன்.)
      நான் ஒரு பேனாக் காதலன்; பித்தன்; அபிமானி. என் காதல் கதையை நாவலாகச் சொல்கிறேன்.

 என் பள்ளியில் ஐந்தாவது வகுப்பு வரை பலகை, பலப்பம்தான். பென்சிலால் எழுதுவதற்குவாய்ப்பே     கிடையாது.
     பள்ளிக்கூடத்தில் பேப்பர், நோட்டுப் புத்தகம் எதுவும் 5-வது வகுப்பு முடியும் வரை கிடையாது.  முதல் ஃபாரம் வந்தபோது நோட்டுப் புத்தகமும், பென்சிலும் கொடுத்தார்கள். அவ்வப்போது ஊக்கு உடைந்ததால் மட்டுமல்ல, பேனாவின் பளபள நிப்பும் கிளிப்பும்  என்னைக் கவர்ந்து   அதன்   மீது தீராத காதலை ஏற்படுத்தி விட்டன.. பள்ளிக் கூடத்தில் பேனாவுக்குத் தடை.   என்ன   காரணம்  சொன்னார்கள் தெரியுமா..? பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக இருக்காது என்றுதான். ஏதோ சப்பைக்காரணம் என்று நான் அதை கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால், என் ஆசிரியர்கள் பலரின் கையெழுத்து எழுத்தாணியால் எழுதியது போல் இருந்த துன்,லீக்ஆகும் பேனாவாக இருந்தால், வலதுகை பெருவிரல் அடையாளங்க ளுடன்ள அங்கங்கே இருக்கும்.  அசப்பில் பார்த்தால் வீடு விற்பனை (அல்லது வாங்கிய) பத்திரம் போல் இருக்கும்.
அது மட்டுமல்ல, சற்றுச் சிவப்பாக இருந்த என் கணக்கு வாத்தியாரின் கட்டை விரலும், ஆள்காட்டி விரலும்,  பேனாவில் எழுதி எழுதி, நீலம் பாய்ந்த விரல்களாக எப்போதும் காட்சி அளிக்கும். ஒரு டம்ளர் தண்ணிரில் அவர்கள் விரலைப் பத்து நிமிஷம் வைத்திருந்தால் அரை புட்டி பேனா மை ரெடியாகிவிடும் என்று சொல்லலாம். அதனாலோ, வேறு என்ன காரணத்தாலோ அவர் எப்போதும் ஒரு மாதிரியான நீலநிறச் சட்டைதான் அணிந்திருப்பார்.
எப்போது ஆறாம் வகுப்பு (முதல் ஃபாரம்) போவோம் என்று இருந்தோம். போனதும் அப்பாவிடம் நாலணாவோ, எட்டணாவோ (மறந்து விட்டது) வாங்கி, நேரே கடைத்தெரு நூர்தாஜ் கடைக்குச் சென்றேன்.
நல்ல பேனா கொடுங்க’ என்று மிதப்பாகக் கேட்டேன்.
என்ன விலையில் வேணும்..? கழட்டி எடுத்து இங்க் போடற பேனா எட்டணா ஆகும். பணம் வெச்சிருக்கியா..? என்ன கலர்ல வேணும்.?’ என்று கேட்டார்.
எந்தக் கலராக இருந்தாலும் பரவாயில்லை. சரி, நீலக்கலர் பேனா கொடுங்க.’ என்றேன்.
கொடுத்தார். அதன் கிளிப் பளபளாவாக இருந்தது. தங்கப் பேனா என்று  சொல்லிக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டேன்.
அடாடா... எழுதிப் பாக்கணுமே... பேனாவுக்கு இங்க் போட்டுத்தர முடியுமா?’ என்று கேட்டேன்.
தரேன். உனக்கு இனாமா ஒரு இங்க் மாத்திரை தரேன். வீட்டுக்குப் போய் ஒரு சின்ன புட்டியில் போட்டு, கொஞ்சம் தண்ணி விடு. கொஞ்ச நேரத்தில் மாத்திரை கரைந்து இங்க் ஆயிடும்’ என்றார். பேனா வாங்கிய சந்தோஷத்தைவிட இலவச (அதாவது புதுத் தமிழில் விலையில்லா) மாத்திரை கிடைத்தது அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது.
மாத்திரையைச் சின்னக் காகிதத்தில் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தார். பேனாவை ஜேபியில் குத்திக் கொண்டேன். தங்க மெடலைக் குத்திக்  கொண்டது போல் உற்சாகம் பொங்கியது.
வீட்டுக்குப்போகுமுன் மழை பெய்தது. ‘அச்சமில்லை, அச்சமில்லை... உச்சி மீது மழை பொழியும் போதிலும்...’ என்று பாடிக் கொண்டு வீட்டுக்குப்  போனேன்.பேனா மன்னராகி விட்டதால் ராஜநடை போட்டுக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.
அம்மா, புதுப் பேனா வாங்கி விட்டேன்’ என்று தலையைத் தூக்கி, புருவத்தை உயர்த்தி ஒரு கெத்துடன் ஜேபியிலிருந்து பேனாவை ஸ்டைலாக எடுத்து அம்மாவிடம் நீட்டினேன்.
அம்மா பேனாவை வாங்காமல், ‘என்னடா இது அநியாயம்? இப்படி நீல வண்ணக் கண்ணனாக வந்திருக்கே?’ என்றாள்.

February 09, 2017

டிக்கெட்டில்லாப் பயணம்

சுமார் நூறு புத்தகங்களை எழுதியுள்ள ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளரைப் பற்றி சில தகவல்கள்.
     அவர் பெயர் : C.E.M.JOAD. (1891 - 1953). ஒரு தத்துவ அறிஞர் அவர். நாற்பதுகளில் BBCயில் Brains Trust என்ற தலைப்பில் ரேடியோ கருத்தரங்குகளை நடத்தி பிராபல்யம் பெற்றவர்.
அவர் நடத்தும் கருத்தரங்குக்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது.கருத்தரங்கில் அவர் துவக்க உரை, முடிவுரை என்று மட்டுமல்ல, மற்றவர்களைக் கேள்வி கேட்பது, ஊக்கம் அளிப்பது என்று இவரே அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பார். அவர்  அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வாக்கியம்: “அது, நீங்கள் என்ன  அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது.” என்று கூறுவாராம்.