November 03, 2014

ஐன்ஸ்டீன்- தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்


ஐன்ஸ்டீன்,  தனது UNIFIED CONCEPT THEORY என்ற கோட்பாட்டை அறிவித்து, அது உலகம்  முழுதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சமயம்  நடந்த நிகழ்ச்சி.
ஐன்ஸ்டீன் நியூயார்க்கில் தனது நண்பரின்  வீட்டில்2,3 நாட்கள் தங்கி இருந்தார். பிறகு அவர் தன் சொந்த ஊரான பிரின்ஸ்டனுக்குப் போனார். 
அவர் சென்றதும், அவர் தங்கி இருந்த அறையை வேலைக்காரப் பெண்மணி பெறுக்கப் போனார் . அறை சுவற்றைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சுவர் பூராவும் ஏதேதோ  எண்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன்  குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன.  ஐன்ஸ்டீன் ஏதோ கிறுக்கித்தள்ளி இருந்தார்.
வேலைக்காரப் பெண்மணி தன் எஜமானரைக் கூப்பிட்டுக் காண்பித்தார். எல்லாம் கணித சூத்திரங்களாக இருந்தன.
ஐன்ஸ்டீனின் நண்பர்   உடனே இரண்டு பேருக்குப் போன் செய்தார். முதலில் ஐன்ஸ்டீனுக்குப் போன் பண்ணி, அந்த சுவரில் எழுதி இருப்பதைப் பற்றிக் கேட்டார். " ஓ, அவையெல்லாம் என் தியரி தொடர்பான சூத்திரங்கள்”‘என்றார்.

‘அப்படியா..சரி” என்று சொல்லிவிட்டு, போனை வைத்து விட்டார்அடுத்து,அவர்  பெரிய கண்ணாடி கடைக்குப் போன் பண்ணினார். ஐன்ஸ்டீன் ‘கிறுக்கிய’ கணித சூத்திரங்கள் பாதுகாப்பாக இருக்க, சுவர் அளவு கண்ணடி சட்டம் போட ஆர்டர் கொடுத்தார்!
*    *        *
ஒரு சமயம் ஐன்ஸ்டீனுக்கு ஒரு கடிதம் வந்தது. “ நீங்கள் மிகச் சிறந்த சிந்தனையாளர் . உங்களுடைய மிகச் சிறந்த ஆறு எண்ணங்களை, எங்கள் கமிட்டிக்குத் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்” என்று கேட்டிருந்தார்கள்.
இதற்கு ஐன்ஸ்டீன் எழுதிய ஆறு வார்த்தைப் பதில்: கடவுள், தேசம், மனைவி, கணிதம், மனித சமுதாயம்,உலக அமைதி!”
*    *        *

 ஐன்ஸ்டீன் தனது  THEORY OF RELATIVITY'ஐ அறிவித்த பிறகு ஒரு பேட்டியில் அவரிடம்  ஒருவர் கேட்டார்: “ உங்கள் கோட்பாட்டைப் பற்றி AMERICAN ACADEMY OF ADVANCE SCIENCE' லிருந்து என்ன கருத்துத் தெரிவித்தார்கள்?”
“ எனக்கு எப்போதுமே இரண்டு விதமான ஆடியன்ஸ் உண்டு: ஒன்று பார்வையற்றவர்கள்; இரண்டாவது, காது கேட்காதவர்கள். முன்னவர்கள் எதையும் பார்க்கமாட்டார்கள். பின்னவர்கள் என்னுடன் பணியாற்றுபவர்கள். நான் சொல்வது எதுவும் அவர்கள் காதில் விழாது!”
*    *        *
ஐன்ஸ்டீனின் சுய சரித்திரம் மொத்தம் 47 பக்கங்கள்தான்! தன் குடும்பத்தைப் பற்றியோ, ஜெர்மன் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ‘ஓடி’ வந்ததைப் பற்றியோ எதையும் அவர் எழுதவில்லை. THEORY OF RELATIVITY' பற்றியும், அது முதலில் எப்படி அவருக்குத் தோன்றியது என்பதையும், அவரது விஞ்ஞான முயற்சிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது போன்ற விஷயங்களைதான் எழுதி இருந்தார்.

டஸ்ஸாட் மெழுகுச் சிலைக் கண்காட்சிக்குப் போனபோது அவரது சிலையை பார்த்தேன். சற்று குள்ளமானவர் என்பது அப்போதுதான் தெரிந்தது. அவருடைய தோளில் கையைப் போட்டுக்கொண்டு பலர் படம் எடுத்துக் கொள்வதைப் பார்த்தேன். எனக்கு மனம் வரவில்லை. அவர் பக்கத்தில் நின்று படம் எடுத்துக் கொண்டேன்.
அவர் சாதாரண மனிதர் அல்ல. அவர்  MAN OF THE CENTURY!
 *           **              *        *             *         *   *
 சமீபத்தில் 92வது வயதில்   காலமான அமெரிக்க நகைச்சுவை நடிகர்  SID CEASER ( 1922-2014) க்கு   ஐன்ஸ்டீன் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சி அனுபவம்:
1955 ஏப்ரல் 15’ம் தேதி சீஸர் தன்னுடைய டி.வி.காமெடி நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு தகவலை டி.வி. நிலயத்தினர் தெரிவித்தார்கள். “ சார்.. பிரின்ஸ்டனிலிருந்து ஐன்ஸ்டீனின் அலுவலகத்திலிருந்து உங்களுக்கு ஒரு போன் வந்தது. ஐன்ஸ்டீன் உங்களைப் பார்க்க விரும்புகிறார். வருகிற திங்கட்கிழமையன்று  வந்து அவரைப் பார்க்க முடியுமா? என்று கேட்டார்கள். ஐன்ஸ்டீன் உங்கள் விசிறியாம்!” என்றார்கள்.

சீஸருக்குத் தலைகால் புரியவில்லை. அதே சமயம் நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்களோ  என்ற சந்தேகமும் வந்தது.
உடனே சீஸர் “அது உண்மையான டெலிபோன்தான் என்று தெரியவந்ததும் ரிகர்ஸலை மூட்டைகட்டி வைத்துவிடுங்கள் என்றார்.

 இனி  இது பற்றி சீஸர் எழுதியதைத் தருகிறேன்:
“முதலில் ஐன்ஸ்டீன் எழுதிய புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வரச் சொன்னேன்.  நாளை, மறுநாள்  இரண்டு நாளைக்குள் முடிந்தவரை படித்து விடுகிறேன். திங்கட்கிழமை அவரை சந்திப்பது என்பது மிக அரிய வாய்ப்பு.
 அதன்படியே கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். முடிந்த வரைப் படித்தேன். புத்தகசாலைக்குச் சென்று அகப்பட்ட புத்தகங்களையெல்லாம் புரட்டினேன். திங்கட்கிழமை (ஏப்ரல் 18, 1955) காலை அவரைச் சந்திக்க பரபரப்புடன் தயார் செய்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இரவு ஒரு மணிவாக்கில் காலமாகிவிட்டார்!
அது செய்தி அல்ல. என் தலைமேல் விழுந்த இடி!”

*           **              *        *             *         *   *
 ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்:
1 Only two things are infinite, the universe and human stupidity, and I'm not sure about the former.
2. Anyone who has never made a mistake has never tried anything new.
3. Coincidence is God's way of remaining anonymous
*           **              *        *             *         *   * 
சார்லி சாப்ளினும் ஐன்ஸ்டீனும் ஒரு திரைப்பட சிறப்புக் காட்சிக்குப் போனார்கள். படம் முடிந்து வெளியே வந்தபோது சாப்ளின் அவரிடம் சொன்னது:  "They cheer me because they all understand me. They cheer you because no one understands you."
 *           **              *        *             *         *   * 
 ஐன்ஸ்டீன் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன. பின்னால் பார்க்கலாம்.
 முன்பு ஒரு பதிவில் போட்டத்   துணுக்கைப் படிக்க, இங்கே சொடுக்கவும்
ஐன்ஸ்டீன் துணுக்கு

4 comments:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. அந்த வீடு நியூயார்க்கில் இப்போது உள்ளதா ?

    ReplyDelete
  3. இந்தத் தகவல் The Lyons Den என்ற புத்தகத்தில் படித்தேன். வீடு பற்றி விவரங்கள் அதில் இல்லை. ஆனால் அதைக் கண்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

    -கடுகு

    ReplyDelete
  4. ///ஐன்ஸ்டீனின் சுய சரித்திரம் மொத்தம் 47 பக்கங்கள்தான்! தன் குடும்பத்தைப் பற்றியோ, ஜெர்மன் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ‘ஓடி’ வந்ததைப் பற்றியோ எதையும் அவர் எழுதவில்லை. THEORY OF RELATIVITY' பற்றியும், அது முதலில் எப்படி அவருக்குத் தோன்றியது என்பதையும், அவரது விஞ்ஞான முயற்சிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது போன்ற விஷயங்களைதான் எழுதி இருந்தார்.///

    நண்பரே, இந்த புத்தகம் எங்கு கிடைக்கும், நான் தேடிக் கொண்டிருக்கிறேன்...

    விவரம் இருந்தால் தயவுசெய்து தொடர்புக் கொள்ளவும்...

    javeedams97@gmail.com
    Whatsapp no- +91 81241 37541

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!