இது Clue இல்லாத குறுக்கெழுத்துப் போட்டி, வாழ்க்கையில் எத்தனை புதிர்களைச் சந்திக்கிறோம். அவற்றில் Clue இல்லாதவைகள் தான் அதிகம். இருந்தாலும் அவைகளைப் பெரும்பாலான சமயங்களில் வென்றிடுகிறோம் அல்லவா!
முயற்சி செய்யுங்கள்!
நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் கமலா- தொச்சு கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்!
இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்!
மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.
விளம்பரங்கள மீது எனக்கு பயங்கர ஆர்வம் உண்டு. பலவற்றில் உள்ள கற்பனைத்திறனை நான் மிகவும் ரசிப்பேன். தேர்ந்தெடுத்த வார்த்தைகள், கச்சிதமான வாக்கியங்கள், தெளிவான வடிமைப்புகள், பொருத்தமான படங்கள், விளம்பரப் பொருளுக்கு ஏற்ற எழுத்துருக்கள், எனறு பலவற்றைச் சேர்த்து பிரமாதமான விளம்பரங்களை பலர் உருவாக்கி வருகிறர்கள். எத்தனையோ வருஷமாக இவைகளை ஆர்வமாகப் பார்த்து வருகிறேன். இந்த ஆர்வமே எனக்கு, இந்தியாவின் நம்பர் -1 விளம்பரக் கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தது.
இங்கு நான் போடும் படங்களை உங்கள் குழந்தைகளிடம் காட்டி இதில் உள்ள கற்பனைத்திறனை ரசிக்கச் செய்யுங்கள். புத்தி கூர்மை பெற உதவும் .
No comments:
Post a Comment