July 27, 2010

புள்ளிகள்: கி.வா.ஜ

ஒட்டுமி ரண்டுளம்
மகாகவி பாரதியாரின் பாடல்களின் அழகை விவரித்து   ஒரு உரையை டில்லித் தமிழ் சங்கத்தில் கி.வா.ஜ ஒரு உரை நிகழ்த்தினார் (1974 வாக்கில்!)
இத்தனை வருஷம் கழிந்த பிறகும் அவர் உரையில் சில பகுதிகள் அப்படியே நினைவில் உள்ளன.
 முதலில் பாரதியார் பாடலைப் பார்க்கலாம்.

மாலைப் பொழுதினிலே.
    மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
    வானையும் கடலையும் நோக்கி இருந்தேன்;
    மூலைக் கடலினை அவ் வானவளையம்
    முத்தமிட் டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;
    நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
    நேரம் கழிவதிலும் நினைப்பின்றியே
    சாலப் பலபல நற் பகற்கனவில்
    தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்.

    ஆங்கு அப்பொழுதில் என் பின்பு றத்திலே,
    ஆள்வந்து நின்று எனது கண் மறைக்கவே,
    பாங்கினிற் கையிரண்டும் தீண்டி அறிந்தேன்.
    பட்டுடை வீசுகமழ் தன்னில் அறிந்தேன்,
    ஓங்கிவரும் உவகை ஊற்றில் அறிந்தேன்;
    ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்;
    ''வாங்கி விடடி கையை யேடி கண்ணம்மா!
    மாயம் எவரிடத்தில்?'' என்று மொழிந்தேன். 

கடற்கரையில் தலைவன் தனியே உட்கார்ந்து இருக்கிறான். அவனை பார்க்கத் தலைவி ஓசைப்படாமல் வருகிறாள். அவன் பின்னே வந்து அவனுடையக் கண்களைப் பொத்துகிறாள். அவள் கையைத் தொட்டதும் அவனுக்கு யார் என்று தெரிந்து விடுகிறது. என்றாலும் அதற்கு முன்னேயே அவனுக்குத் தெரிந்து விட்டதாம். எப்படி? அவள் உடுத்தி இருக்கும் பட்டு உடையின் மெலிதான வாசனையை  முகர்ந்து மூக்கு கண்டுபிடித்து உணர்த்திவிட்டதாம். மூக்குக்கும் முன்பேயே அவன் உள்ளத்தில் பெருகிய உவகை அவனுக்கு அறிவித்து விட்டதாம்.அதற்கு முன்பு, ஒன்று பட்ட இரண்டு மனங்களில்,  ஒன்றில் மகிழ்ச்சி காரணமாகத்  துடிப்பு அதிகரித்தால், மற்ற உள்ளத்திலும் துடிப்[பு அதிகரிக்கும். அப்படி அதிகரித்ததால் அந்த துடிப்பு கண்டுபிடித்து விட்டதாம்!  இதை விஞ்ஞான பூர்வமாக  SYMPATHETIC VIBRATION என்பார்கள். தலவைனை பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியால் அவள் உள்ளத் துடிப்பு அதிகரிக்கிறது. அதே  FREQUENCY-யை  உடைய தலைவன் உள்ளத்திலும் அது தன்னிச்சையாக துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. தொடாமலேயே, பட்டுடை  வாசனையை முகர்வதற்கு முன்பேயே,   உவகை பெருகுவதற்கு முன்பேயே,  இதயத்  துடிப்பு அவனுக்கு உணர்த்திவிட்டது!
இதைத் தான் ‘ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன்’ என்று: பாரதியார் கச்சிதமாகச் சொன்னார்.
கி.வா.ஜ. அபாரமாக விளக்கினார்.
(நான் அதை இங்கு ஆங்கிலம் கலந்து  காமா சோமா என்று எழுதி இருக்கிறேன்.).

7 comments:

  1. Fantastic......Superb poetry by Bharathi & explanation by Ki.Va.Ja.

    KOthamalli

    ReplyDelete
  2. சிலேடையாகப் பேசுவதில் சமர்த்தர் என்ற பெயர் பெற்றவரல்லவா இவர்?

    ReplyDelete
  3. கி.வா.ஜ. வின் பரம பக்தரை (BalHanuman) உசுப்பிவிட்டது உங்கள் கட்டுரை! எஙளுக்கு கொண்டாட்டம்! பல முறை இந்த incidents மேற்கோள் காட்டப்பட்டாலும் படிக்க சுவைதான்.

    ஆமாம், வெளியில் தூறலா அல்லது தூற்றலா?

    -ஜெ.

    ReplyDelete
  4. BalHanuman அவர்கள் 11 பின்னூட்டங்களைப் போட்டிருந்தார். அவற்றைத் தொகுத்துத் தனிப் பதிவாகப் போட்டுள்ளேன்

    ReplyDelete
  5. ராஜ சுப்ரமணியன்July 29, 2010 at 10:28 AM

    மஹாகவியின் கவிதையும் அதை கி.வா.ஜ. விளக்கிய விதமும் அருமையிலும் அருமை. கவிதை என்னை எங்கோ கொண்டு சென்றது.

    ReplyDelete
  6. சிலேடைகள் எனும்போது, முன்பு படித்த இந்த நிகழ்வு மறக்கமுடியாதது
    ஒட்டக்கூத்தருக்கும் ஒளவைக்கும் நடந்தது. ஒரு சமயம், ஒளவையை கிண்டல் செய்யும் விதமாக ஒட்டக்கூதர் ஒரு கேள்வியை கேட்டார். ஒரு காலில் நாலிலை பந்தலடி? (வாய்கால் ஓரங்களில் வள்ரும் ஒரு செடி. அது மிக சிறியதாக, ஒரு சிறிய தண்டுடன் நான்கு இலைகளுடன் இருக்கும்.வேறு எதுவும் கிடையாது. நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதுபற்றி தெரியாது.) என்று கேட்டார். ஒளவைக்கு கடுங்கோபம். கேள்வியிலேயே தன்னை “அடி” என்று சொல்லிவிட்டானே என்று. பதிலும் சொல்லவேண்டும், அவனையும் உணரவைக்கவேண்டும். “எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே, குலராமன் தூதுவனே, மட்டில் கூரையில்லா வீடே “ஆரை” அட சொன்னாய்”””” என்றார். த்மிழில் எண்களுக்கு குறியீடு உள்ளது. அ என்றால் 8க் குறிக்கும். வ என்றால் ¼ க் குறிக்கும். அதாவது அவ லட்சணமே, எமனேறும் பரி( பரி என்றால் குதிரை, எமனேறும் பரி? எருமை மாடு.) எருமை மாடே, குலராமன் தூதுவன்(எல்லோரும் அறிந்தது அனுமன், இங்கு அது குரங்கு) குரங்கே, அடுத்து கூரையில்லாவீடே( வீட்டிற்கு கூரையில்லையென்றால்? குட்டிசுவர்) குட்டிசுவரே, ஆரையடா? சொன்னாய். அவர் கேட்டது ஒரேஒரு கேள்வி மற்றும் ஒருகிண்டல்தான். அதில் அவர் கேட்ட கேள்விக்கு பதில் மற்றும் ஒரு வார்த்தைக்கு எத்தனை மறு வார்த்தைகள். அடி என்று யாரைச்சொன்னாய்? என்று ஒரு பதில். அது ஆராக்கீரையடா என்று மற்றொரு பதில். என்ன இருந்தாலும் ஒள்வை பெண்ணல்லவா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!