April 11, 2010

தமிழ் முத்து- 7 அரவம் கரந்ததோ

அரவம் கரந்ததோ  அச்சுமரம் இற்றுப்
புரவி கயிறுருவிப் போச்சோ - இரவிதான் செத்தானோ
இல்லையோ தீ வினையோ பாங்கி எனக்கு
எத்தால் விடியும் இரா.        
                                     - ஒப்பிலாமணிப்  புலவர்
-----------
 தலைவனின் வரவுக்காக காத்திருக்கும் தலைவி, இரவுப் பொழுது நீண்டு கொண்டே போகிறதே என்ற ஆதங்கத்தில், சூரியன் வராததற்குக் காரணம் அவனைப்  பாம்பு கடித்ததோ என்பது போன்ற பல காரணங்களை வெறுப்புடன் பட்டியல் இடுகிறாள்!

4 comments:

  1. ரவி செத்தால் எப்படி விடியும்?

    ReplyDelete
  2. கவிதையை படிக்கணும். ஆராயகூடாது

    Regards

    RV Ramani

    ReplyDelete
  3. <<>>
    ”விளையாட்ப் போன் பையன் இன்னும் வரலை. மணி எட்டாகிறது. எங்கே செத்து ஒழிந்தானோ” என்று அம்மா சொல்லும்போது அந்த “செத்து” என்பது இறப்பைக் குறிக்காது

    ReplyDelete
  4. கவிதைகளை இரசிக்கத் தெரிந்துகொள்ளுங்கள். காழ்ப்புணர்வு கொள்ளாதீர்கள். கவிதை உள்மனதை ஆட்டும் நடனமாதே! - கலைமகன் பைரூஸ்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!